ஜூரோங்கில் திடீர் வெள்ளம்; கனமழையால் வெள்ள எச்சரிக்கை

ஜூரோங்கில் திடீர் வெள்ளம்; கனமழையால் வெள்ள எச்சரிக்கை

1 mins read
d1a2c8fc-a42e-4741-98f5-0a55eb83c924
-

சிங்­கப்­பூ­ரில் உள்ள பல்­வேறு இடங்­களில் நேற்று பிற்­ப­கல் பெய்த கன­மழை கார­ண­மாக ஜூரோங் ஈஸ்ட் ஸ்தி­ரீட் 32லும் பூன் லே வே அரு­கில் உள்ள என்­டர்­பி­ரைஸ் சாலை­யி­லும் திடீர் வெள்­ளம் ஏற்­பட்­டது.

இதன் விளை­வாக வாக­னங்­கள் அங்கு செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­டது. உதவி வழங்க தனது அதி­கா­ரி­க­ளைப் பாதிக்­கப்­பட்ட இடங்­க­ளுக்கு அனுப்­பி­வைத்­துள்­ள­தாக பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் தெரி­வித்­தது.

ஜூரோங் ஈஸ்ட் ஸ்தி­ரீட் 32ல் வெள்ள நீர் பிற்­ப­கல் 3.50 மணி அள­வில் வடிந்­தது. அப்­ப­கு­தி­யில் உள்ள இரண்டு வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­க­ளுக்கு அரு­கில் உள்ள சாக்­க­டை­களில் 90 விழுக்­காட்டு அள­வுக்கு நீர் நிரம்­பி­விட்­ட­தாக நேற்று பிற்­ப­கல் 3.15 மணி அள­வில் கழ­கம் தெரி­வித்­தி­ருந்­தது.

சுவா சூ காங் அவென்யூ 1, டெக் வாய் லேன் ஆகிய வட்­டா­ரங்­களில் வெள்ள அபா­யம் இருப்­ப­தாக பிற்­ப­கல் 3.25 மணி அள­வில் அது எச்­ச­ரிக்கை விடுத்­தது.

உட்­லண்ட்ஸ் சாலை­யி­லும் கிராஞ்சி விரை­வுச்­சா­லை­யி­லும் வெள்­ளம் ஏற்­ப­டக்­கூ­டும் என்று பிற்­ப­கல் 3.30 மணி அள­வில்

கழ­கம் எச்­ச­ரித்­தது. அவ்­வி­டங்­

க­ளைத் தவிர்க்­கும்படி அது பொது­மக்­க­ளி­டம் கேட்­டுக்­கொண்­டது.

இம்­மா­த முற்­பா­தி­யில் பெரும்­பா­லான நாள்­களில் இடி­யு­டன் கூடிய மழை எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக சிங்­கப்­பூர் வானிலை மையம் முன்­னு­ரைத்­துள்­ளது.

இன்று முதல் வியா­ழன் வரை பிற்­ப­கல் நேரத்­தில் இடி­யு­டன் மழை பெய்­யக்­கூ­டும் என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் முன்­னு­ரைத்­துள்­ளது.