$1 மி. மோசடி: உடந்தையாய் இருந்ததை ஒப்புக்கொண்ட சகோதரிகள்

$1 மி. மோசடி: உடந்தையாய் இருந்ததை ஒப்புக்கொண்ட சகோதரிகள்

2 mins read
ba9a2ef1-0d92-4077-9171-16493ee343ef
-

வேலை­வாய்ப்பு, முத­லீடு, காதல் ஆகி­யவை தொடர்­பி­லான மோசடிகளுக்கு உடந்­தை­யாக இருந்­த­தா­கச் சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை சகோ­த­ரி­கள் இரு­வர் ஒப்­புக்­கொண்­டுள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளான அவர்­கள் கிட்­டத்­தட்ட ஒரு மில்­லி­யன் வெள்ளி மோச­டிக்கு உத­வி­ய­தா­கத் தெரி­கிறது.

20 வயது நூர் சஃபிக்கா முக­மது அவால், நேர்­மை­யற்ற முறை­யில் 200,000 வெள்­ளியை வைத்­தி­ருந்­த­தா­க­வும் அதில் சிறி­த­ளவு பணத்தை ஆடை­கள் வாங்­க­வும் சிங்­கப்­பூ­ருக்­குள்­ளேயே விடுமுறையை உல்­லா­ச­மா­கக் கழிக்­க­வும் செலவு செய்­த­தா­க­வும் கூறப்­பட்­டது. அதன் தொடர்­பில் கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக மாற்­றிய ஐந்து குற்­றச்­சாட்­டு­களை சஃபிக்கா நேற்று நீதி­மன்­றத்­தில் ஒப்­புக்­கொண்­டார்.

அவ­ரது சகோ­த­ரி­யான 19 வயது நூர் அடிக்கா முக­மது அவால், தன்­மீது சுமத்­தப்­பட்ட அதே­போன்­ற­தொரு குற்­றச்­சாட்டை ஒப்­புக்­கொண்­டார்.

2020ஆம் ஆண்டு டிசம்­ப­ருக்­கும் சென்ற ஆண்டு மே மாதத்­திற்­கும் இடை­யில் மோச­டி­களில் பாதிக்­கப்­பட்ட 39 பேர் காவல்­து­றை­யி­டம் புகா­ர­ளித்­த­னர்.

அந்த மோச­டி­களில் சகோ­த­ரி­கள் இரு­வ­ருக்­கும் தொடர்பு இருப்­ப­தாக அர­சாங்க வழக்­க­றி­ஞர் கூறி­னார்.

மோச­டிக்­கா­ரர்­கள் முத­லில் சமூக வலைத்­த­ளங்­கள் மூல­மா­கவோ குறுஞ்­செய்தி மூல­மா­கவோ வேலை­வாய்ப்பு தரு­வ­தா­கத் தொடர்­பு­கொண்­ட­னர்.

பின்­னர் இணை­யத்­தில் பொருள்­களை வாங்­கு­வ­தற்கு தர­குப் பணம் தரு­வ­தாக ஆசை­காட்­டி­னர்.

காதல் மோச­டி­களில் செய­லி­கள் வழி நட்பை உரு­வாக்­கிக்­கொண்டு பிறகு பல்­வேறு கார­ணங்­க­ளுக்­கா­கப் பெருந்­தொ­கையை வங்­கிப் பரி­வர்த்­தனை செய்­யும்­ப­டிக் கேட்­ட­னர்.

2020ஆம் ஆண்டு இறு­தி­யில் 'டேக்ட்' எனும் செய­லி­யின் மூலம் சகோ­த­ரி­க­ளின் தாயா­ரைச் சந்­தித்த மோச­டிக்­கா­ரர்­கள்,

ஒரு வங்­கிக் கணக்­கைத் தொடங்கி அதற்­கான ரொக்­கக் கழிவு அட்­டை­க­ளைத் தங்­க­ளுக்கு அனுப்­பும்­ப­டிக் கூறி­னர். தாயா­ருக்கு அந்த நடை­மு­றை­கள் தெரி­யா­த­தால் மகள்­க­ளின் உத­வியை நாடி­னார்.

ஆனால் சகோ­த­ரி­கள் இரு­வ­ரும் தாங்­களே மோச­டிக்­காரர்களைத் தொடர்­பு­கொண்டு அவர்­க­ளுக்கு வேண்­டிய உத­வி­க­ளைச் செய்­த­னர்.

தாங்­கள் செய்­வது சட்­ட­வி­ரோ­த­மான செயல் என்று தெரிந்தே பணத்­துக்­காக அவர்­கள் அதில் ஈடு­பட்­ட­தாக அர­சாங்க வழக்­க­றி­ஞர் குறிப்­பிட்­டார்.

ஒரு சந்­தர்ப்­பத்­தில் தனக்­குச் சொந்­த­மில்­லாத 200,000 வெள்­ளியை சஃபிக்கா தானே வைத்­துக்­கொண்டு தனிப்­பட்ட செலவுகளுக்­குப் பயன்­ப­டுத்­தி­னார்.

மோச­டிக்­கா­ரர்­கள் அவ­ரைத் தங்­க­ளுக்கு இனி வேலை­செய்ய வேண்­டாம் என்று நிரா­க­ரித்­த­தும் வேறொரு மோச­டிக்­கா­ர­ரு­டன் தொடர்பு ஏற்­ப­டுத்­திக்­கொண்டு பண மோச­டிக்கு உத­வி­னார்.

இரு சகோ­த­ரி­களும் இப்­போது தடுப்­புக்­கா­வ­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

நன்­ன­டத்தை மற்­றும் சீர்­தி­ருத்­தப் பயிற்­சிக்­கான தகுதி அறிக்­கையை வழங்­கும்­படி நீதி­பதி உத்­த­ர­விட்­டுள்­ளார். வழக்கு மீண்­டும் அடுத்த மாதம் விசா­ர­ணைக்கு வரும்.