தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதையில் மேலும் 11 நிலையங்கள்

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதையில் மேலும் 11 நிலையங்கள்

2 mins read
f97c66a9-6bd8-4900-abec-30d843ca4a9d
-

தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில்­பாதை­யில் மேலும் 11 நிலை­யங்­கள் இவ்­வாண்­டின் பிற்­பா­தி­யில் செயல்­ப­டத் தொடங்­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்­தப் புதிய நிலை­யங்­கள் ஸ்டீ­வன்­சி­லி­ருந்து ஆர்ச்­சர்ட்­டுக்­கும், ஊட்­ர­மி­லி­ருந்து கரை­யோ­ரப் பூங்­கா­வுக்­கும் இடைப்­பட்ட பாதை­யில் அமைந்­துள்­ளன.

மூன்­றா­வது கட்­டப் பணி­கள் தொடர்­பில் இந்­தத் தக­வல்­க­ளைத் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் நேற்று தம் அமைச்­சின் வர­வு­செ­ல­வுத் திட்ட விவா­தத்­தின்­போது பகிர்ந்­து­கொண்­டார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் தடங்­கல் பல ஏற்­பட்டு இருந்­தாலும் எம்­ஆர்டி கட்­ட­மைப்­பின் விரி­வாக்­கப் பணி­கள் துரி­த­மாக நடந்து வரு­வ­தாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அவர் உறு­தி­ய­ளித்­தார்.

நகர்ப் பகு­தி­யில் அமைந்­துள்ள பல இடங்­க­ளுக்கு வடக்கு வட்­டா­ர­வா­சி­கள் செல்­வ­தற்­கான பயண நேரத்தை வெகு­வா­கக் குறைத்­திட புதிய நிலை­யங்­கள் உத­வும் என்று திரு ஈஸ்­வ­ரன் கூறி­னார்.

தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில்­பாதை முழு­மை­யா­கத் திறக்­கப்­பட்­ட­தும் 240,000 மேற்­பட்ட வீடு­கள் ஏதே­னும் ஒரு தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் நிலை­யத்­துக்கு 10 நிமிட தொலை­வில் அமைந்­தி­ருக்­கும் என அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை­யின் மூன்­றா­வது கட்­டத்­தில் 13 நிலை­யங்­கள் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளன.

இருப்­பி­னும், மவுண்ட் பிளே­சண்ட், மரினா சவுத் ஆகிய இரண்டு நிலை­யங்­களும் பின்­னாளில்­தான் திறக்­கப்­படும் என்­றும் அங்­குள்ள வீட­மைப்பு மேம்­பாட்­டுத் திட்­டங்­கள் முடிந்­த­வு­டன் அவை இயங்­கத் தொடங்­கும் என்­றும் கூறப்­பட்­டது.

இதற்­கி­டையே, ஜுரோங் வட்­டா­ரப் பாதை 2027ஆம் ஆண்­டில் இ­ருந்­தும் குறுக்கு ரயில் பாதை 2030ஆம் ஆண்­டி­லி­ருந்­தும் கட்­டங்­கட்­ட­மா­கத் திறக்­கப்­படும் என்று திரு ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

உச்ச நேரப் பய­ணங்­க­ளின் தேவை அதி­க­ரிப்­பைச் சமா­ளிப்­பது தொடர்­பில் கேட்­கப்­பட்ட கேள்­விக்கு அது தொடர்­பா­கத் தம் அமைச்சு ஆராய்ந்து வரு­வ­தா­க­வும் அமைச்­சர் ஈஸ்­வ­ரன் குறிப்­பிட்­டார்.