தாமான் ஜூரோங்கில் புதிய பலதுறை மருந்தகம்

தாமான் ஜூரோங்கில் புதிய பலதுறை மருந்தகம்

1 mins read
8ba890a7-8cbe-4f43-a4f8-0b95fa4ddf16
-

ஜூரோங்வாசி­க­ளின் மருத்­து­வத் தேவை­க­ளைப் பூர்த்­தி­செய்ய மூன்­றா­வ­தாக ஒரு பல­துறை மருந்­த­கம் 2028ஆம் ஆண்­டிற்­குள் திறக்­கப்­ப­ட­வுள்­ள­தாக சுகா­தார மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் ஜனில் புதுச்­சேரி கூறி­யுள்ளா்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற சுகா­தார அமைச்­சின் வரவு­செ­ல­வுத் திட்ட விவா­தத்­தின்­போது பேசிய அவர், புதிய பல­துறை மருந்­த­கம் தாமான் ஜூரோங்­கில் அமை­ய­வுள்­ள­தா­கக் கூறி­னார். தற்­போ­துள்ள பய­னி­யர், ஜூரோங் பல­துறை மருந்­த­கங்­க­ளு­டன் புதிய பல­துறை மருந்­த­கம் இணைந்து ஜூரோங் வாசி­க­ளுக்­காக இயங்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

மேலும், குவீன்ஸ்­ட­வுன் பல­துறை மருந்­த­கம் 2030க்குள் மேம்­ப­டுத்­தப்­பட்டு வேறு இடத்­திற்கு மாற்­றப்­ப­ட­வுள்­ளது. அது தயா­ரா­கும் வரை தற்­போ­தைய குவீன்ஸ்­ட­வுன் மருந்­தக வளா­கம் இயங்­கும்.