வீவக மறுவிற்பனை வீட்டு விலை தொடர்ந்து ஏறுமுகம்

வீவக மறுவிற்பனை வீட்டு விலை தொடர்ந்து ஏறுமுகம்

2 mins read
36955adc-66e1-4670-a1f8-a73b877741ba
பினாக்கிள்@டக்ஸ்டனில் உள்ள ஐந்து அறை வீவக வீடு ஒன்று ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் விற்கப்பட்டது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

29 வீடுகள் தலா ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் விற்பனை

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக (வீவக) மறு­விற்­பனை வீட்டு விலை­கள் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கின்றன.

20வது மாத­மாக கடந்த பிப்ர­வரியிலும் மறு­விற்­பனை வீட்டு விலை­கள் அதிகரித்தன. ஆனால் சொத்­துச் சந்­தையை மெதுவடையச் செய்வதற்காக கடந்த டிசம்­ப­ரில் அறி­மு­கப்­படுத்­தப்­பட்ட நட­வ­டிக்­கை ­க­ளால் விற்­கப்­படும் மறு­விற்­பனை வீடு­க­ளின் எண்­ணிக்கை குறைந்து உள்ளது.

கடந்த மாதத்தின் கழக மறு­விற்­பனை வீட்டு விலை 0.6 விழுக்­காடு அதி­க­ரித்­தது. ஜன­வ­ரி­யில் அந்த விலை உயர்வு 1.1 விழுக்­கா­டாக இருந்­தது.

சொத்து விற்­பனை இணை­யத் தளங்­க­ளான '99.co', எஸ்­ஆர்­எக்ஸ் ஆகி­ய­வற்­றின் புள்­ளி­வி­வ­ரங்­கள் மறு­விற்­பனை வீட்டு விலை அதி­க­ரித்­துள்­ள­தைக் காட்­டு­கின்­றன.

கடந்த ஆண்டு பிப்­ர­வரி மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் இவ்­வாண்டு பிப்­ர­வ­ரி­யில் 12 விழுக்­காடு விலை அதி­க­ரித்­துள்­ளது.

முதிர்ச்­சி­ய­டைந்த, முதிர்ச்­சி அடையாத குடி­யி­ருப்­புப் பேட்­டை ­க­ளி­லும் மறு­விற்­பனை வீட்டு விலை அதி­க­ரித்து காணப்­ப­டு­கிறது.

ஐந்து அறை வீட்டு விலை ஏறக்­கு­றைய 1.4 விழுக்­காடு கூடி­யி­ருக்­கிறது. மூவறை வீடு­க­ளின் விலை 0.1 விழுக்­காடு குைறந்தது.

இந்நிலை­யில் விற்­கப்­படும் வீடு ­க­ளின் எண்­ணிக்கை 22 விழுக்­காடு குறைந்­துள்­ளது.

இதன் அடிப்­ப­டை­யில் கடந்த மாதம் சுமார் 1,904 கழக வீடு­கள் கைமா­றி­யுள்­ளன. இதற்கு முந்­தைய மாதத்­தில் விற்­கப்­பட்ட 2,442 வீடு ­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இது குறைவு.

சென்ற பிப்­ர­வ­ரி­யில் 29 மறு­விற்­பனை வீடு­கள் ஒவ்­வொன்­றும் குறைந்­தது ஒரு மில்­லி­யன் வெள்­ளிக்கு மேல் விற்­கப்­பட்­டுள்­ளன.

ஜன­வ­ரி­யில் விற்­கப்­பட்ட 27 வீடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இது அதி­கம்.

ஒரு மில்­லி­யன் வெள்­ளிக்கு மேல் விற்­கப்­பட்ட வீடு­களில் ஏழு வீடு­கள் மத்­திய வட்­டா­ரத்­தில் இடம்­பெற்­றுள்­ளன.

குவீன்ஸ்­ட­வுன் வட்­டா­ரத்­தில் நான்கு வீடு­களும் தோ பாயோ, கிள­மெண்டி, பீஷான், காலாங்/வாம்ேபா ஆகிய வட்­டா­ரங்­களில் தலா மூன்று வீடு­களும் ஒரு மில்­லி­யன் வெள்­ளிக்கு மேல் விற்­கப்­பட்­டு உள்­ளன.

கடந்த மாதம் ஒட்­டுெ­மாத்த விற்­ப­னை­யில் 29 மில்­லி­யன் வெள்ளி வீடு­க­ளின் பங்கு மட்­டும் 1.5 விழுக்­காடு ஆகும்.

பிப்­ர­வ­ரி­யில் கேன்­டோன்­மண்ட் ரோட்­டில் உள்ள பினாக்­கிள்@டக்ஸ்­டன் குடி­யி­ருப்­புப் பேட்­டை­யில் உள்ள ஐந்து அறை வீடு ஆக அதிக விலைக்கு விற்­கப்­பட்­டது.

ஒரு மில்­லி­யன் 308,000 வெள்­ளிக்கு அந்த வீடு விற்­கப்­பட்­டது.

கடந்த மாதம் குறை­வான மறு­விற்­பனை வீடு­கள் விற்­கப்­பட்­ட­தற்கு சீனப் புத்­தாண்டில் நட­வ­டிக்­கை­கள் குறைந்­ததே கார­ணம் என்று சொத்­துச் சந்தை ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் மற்­றொரு கார­ணம் என்று அவர்­கள் குறிப்­பிடுகின்றனர்.

புரோப்­நெக்ஸ் ஆய்­வுப் பிரி­வின் தலை­வ­ரான வோங் சியவ் யிங், முதல் முறை­யாக கடந்த மே மாதம் மறு­விற்­பனை வீடு­க­ளின் விற்­பனை 2,000க்குக் கீழ் குறைந்­தது என்று கூறி­னார். ஆனால் 2017 முதல் 2020 வரை முந்­தைய ஆண்­டு­ களுடன் ஒப்­பிட்­டால் கடந்த பிப்­ர­வ­ரி­யில் கூடு­த­லா­கவே கழக வீடு­கள் விற்கப்பட்டுள்ளன என்று ஆரஞ்ச்டீ & டை நிறு­வ­னத்­தின் ஆய்வு மற்றும் பகுப்­பாய்­வுப் பிரி­வின் உதவி தலை­ வ­ரான கிறிஸ்­டின் சன் தெரி­வித்­துள்­ளார்.