உக்ரேன், அதன் அண்டை நாடுகளுக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் உதவி

உக்ரேன், அதன் அண்டை நாடுகளுக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் உதவி

2 mins read
453a155d-ce9c-42b9-b3fb-8b01b3423c7d
உக்ரேன்-போலந்து எல்லையைக் கடந்து வந்த உக்ரேனிய குடும்பத்துக்கு போலந்து ராணுவ வீரர் ஒருவர் பொருட்களை தூக்கிச் சென்று உதவி செய்கிறார். குறைந்தது 2.2 மில்லியன் உக்ரேனியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியிருப்பதாக ஐநா தெரிவிக்கிறது. படம்: ஏஎஃப்பி -

போரால் பாதிக்­கப்­பட்­டுள்ள உக்­ரேன் மற்­றும் அதன் ஆறு அண்டை நாடு­க­ளுக்கு சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கம் $2.4 மில்­லி­யன் மதிப்­புள்ள உத­விப் பொருட்­களை அனுப்பி வைக்­கிறது.

போரில் இரண்டு மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான உக்­ரே­னி­யர்­கள் பாதிக்­கப்­பட்டு அக­தி­க­ளா­கி­யுள்­ள­னர். சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தின் இரண்­ட­வது தவணை உதவி அவர்­க­ளுக்கு பேரு­த­வி­யாக இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அனைத்­து­லக செஞ்­சி­லு­வைச் சங்­கம் மற்­றும் ரெட் கிர­சென்ட் கூட்­ட­மைப்பு, தேசிய செஞ்­சி­லு­வைச் சங்­கங்­கள், அனைத்­து­லக செஞ்­சி­லு­வைச் சங்க மன்­றம் ஆகி­ய­வற்­றின் மூல­மாக சுமார் 2.4 மில்­லி­யன் வெள்ளி மதிப்­புள்ள உத­விப் பொருட்­கள் அனுப்பி வைக்­கப்­ப­டு­வ­தாக நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கம் தெரி­வித்­தது.

முதல் தவ­ணை­யாக இதற்கு முன் சங்­கம் அனுப்பி வைத்த 100,000 அமெ­ரிக்க டாலர் மதிப்­புள்ள பொருட்­கள் இம்­மா­தம் 4ஆம் ேததி உக்­ரே­னைச் சென்று அடைந்­தது. கடந்த மாதம் 25ஆம் தேதி ெபாது­மக்­க­ளி­ட­மி­ருந்து நிதி திரட்­டும் முயற்­சி­களை சங்­கம் தொடங்­கி­யது. அதன் மூலம் இது­வரை மூன்று மில்­லி­யன் வெள்ளி வரை நிதி திரட்­டப்­பட்­டுள்­ள­தாக சங்­கம் தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரில் உள்ள உக்­ரே­னிய மன்­றம் நிதி திரட்­டும் பணியை செய்து வரு­கிறது. இங்­குள்ள வங்­கி­களும் தனது ஊழி­யர்­க­ளி­ட­ம் இ­ருந்து நிதி திரட்டி வரு­கின்­றன.

டிபி­எஸ் டிஜி­பேங், ஃபுட் பாண்டா ஆகி­யவை தங்­க­ளு­டைய செயலி வழி­யாக நிதி திரட்­டு­கின்­றன. தெமா­செக் அற­நி­று­வ­ன­மும் 100,000 அமெ­ரிக்க டாலரை நன்­கொ­டை­யாக வழங்­கி­யுள்­ளது.

சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தின் பொதுச் செய­லா­ள­ரான பெஞ்­ச­மின் வில்­லி­யம், நன்­கொ­டை­யா­ளர் சமூ­கத்­தின் ஒற்­று­மைக்­கும் ஆத­ர­வுக்­கும் நன்றி தெரி­வித்­துள்­ளார்.

"சமூ­கத்­தில் பலர் நிதி திரட்­டு­வது மகிழ்ச்சி அளிக்­கிறது. தற்­போ­தைய மோதல் மற்­றும் எல்லை நெருக்­க­டி­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள அப்­பாவி மக்­க­ளுக்கு மனி­தா­பி­மான உதவி தேவைப்­ப­டு­கிறது," என்று அவர் குறிப்­பிட்­டார்.

திரட்­டப்­பட்ட நிதி­யைப் பயன்­ப­டுத்­து­வ­தில் வெளிப்­ப­டைத்­தன்­மையை சங்­கம் உறுதி செய்­யும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தின் நிதி திரட்டு இவ்­வாண்டு மே 31ஆம் தேதி முடி­வ­டை­கிறது.

சங்­கத்­தின் இரண்­டா­வது தவணை உதவி, அக­தி­களை ஏற்று வரும் போலந்து, ஹங்­கேரி, லித்­து ­வே­னியா, ஸ்லோ­வா­கியா, மோல்­டோவா, ருமே­னியா உள்­ளிட்ட ஆறு அண்டை நாடு­க­ளுக்­கும் உக்­ரே­னுக்­கும் மனி­தா­பி­மான காரி­யங்­க­ளுக்கு கைகொ­டுக்­கும்.

எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய சிறார்­கள், ஒற்­றைப் பெற்­றோர், முதி­யோர், ஊன­முற்­றோர் ஆகி­யோரை இலக்­கா­கக் கொண்டு உதவி வழங்­கப்­படும் என்று சிங்­கப் ­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கம் தெரிவித்தது.