காட்டுப் பன்றி மோதியது; மருத்துவமனையில் பெண்

காட்டுப் பன்றி மோதியது; மருத்துவமனையில் பெண்

2 mins read
b8935042-1cd2-4312-98fc-112a58a01ca9
காட்டுப் பன்றி மோதியதால் நீண்ட நேரம் பெண் தரையில் விழுந்து கிடந்தார். -

ஈசூன் வட்­டா­ரத்­தில் காட்­டுப் பன்றி மோதி­ய­தால் ஒரு பெண் காய­ம் அ­டைந்­தார்.

புதன்­கி­ழமை மாலை 6.50 மணி­ய­ள­வில் ஈசூன் ஸ்தி­ரீட் 81ல் உள்ள புளோக் 846லிருந்து உதவி கேட்டு அழைப்பு வந்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

நான்கு மாடி புளோக்­கின் தரைத் தளத்­தில் கடை­கள் வரி­சை­யாக உள்­ளன. நாயின் உய­ரம் கொண்ட காட்­டுப்பன்றி, பெண் மீது மோதிய பிறகு மூக்­குக் கண்­ணாடி கடை­யில் உள்ள கண்­ணா­டிப் பெட்­ட­கத்தை இடித்­து­விட்டு பாய்ந்து ஓடி­ய­தாக சம்­ப­வத்தை நேரில் பார்த்த சிலர் கூறி­யுள்­ள­னர்.

அதே புளோக்­கில் உள்ள பழ வியா­பா­ரி­யான லெமன் டான், 31, உணவு வாங்­கிக்­கொண்டு கடை­யின் பின்­பு­ற­மாக திரும்­பிக் கொண்­டி­ருந்­த­போது தனது கடைக்கு அடுத்­துள்ள கடை­யி­லி­ருந்து காட்டுப் பன்றி வெளியே ஓடி­ய­தாகச் சொன்­னார்.

"நான் கடைக்­குள் பதுங்­கிக் கொண்­டேன். வேக­மாக ஓடிய காட்டுப் பன்றி ஒரு பெண் மீதும் அவ­ரது மகள் மீதும் மோதி­யது," என்று ஷின் மின் நாளேட்­டுக்கு அளித்த பேட்­டி­யில் கூறி­யி­ருந்­தார்.

"பெரிய சத்­தம் கேட்­டது. காட்டுப் பன்றி ஓடி­ய­தால் மூக்­குக் கண்­ணாடி கடை­யின் காட்­சிப் பெட்­ட­கம் உடைந்­த­தாக பின்­னர் தெரிந்­து­கொண்­டேன்.

"காட்­டுப் பன்றி மோதிய பிறகு தரை­யில் பெண் அதிக நேரம் விழுந்­து­கி­டந்­தார். அவ­ரது மகள் சத்­த­மாக அழு­து கொண்­டி­ருந்­தார்," என்­றார் திரு டான்.

அங்கு வந்த குடி­மைத் தற்­காப்புப் படை­யின் மருத்­துவ உத­வி ­யா­ளர்­கள் பெண்­ணுக்கு முத­லு­தவி சிகிச்­சை­களை செய்­த­னர். அதன் பிறகு அந்­தப் பெண்ணை கூ டெக் புவாட் மருத்­து­வ­ம­னைக்கு அவர்­கள் அனுப்பி வைத்­த­னர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதற்­கி­டையே அவ்­வட்­டார பொறுப்­பா­ள­ரான நீ சூன் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான கேரி டான், அந்தச் சம்­ப­வம் அதிர்ச்­சி­யளித்ததாக வியா­ழன் அன்று வெளி­யிட்ட ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

"மக்­கள் நட­மாட்­டம் அதி­க­முள்ள இந்­தப் பகு­தி­யில் காட்­டுப் பன்­றி­கள் வரு­வ­தற்­குத் தயங்­கும். நக­ர­மன்ற தூதர்­க­ளை­யும் துப்பு­ர­வா­ளர்­க­ளை­யும் கண்­கா­ணிக்கு­மாறு கேட்­டுக்கொண்டேன்," என்று கேரி டான் தெரி­வித்­தார்.