பிடோக் வீட்டில் மூண்ட தீயில் ஒருவர் மாண்டார்

பிடோக் வீட்டில் மூண்ட தீயில் ஒருவர் மாண்டார்

1 mins read
05284285-740c-4ca3-aedc-af09e5814d40
தனிநபர் நடமாட்டச் சாதனத்துக்கு மின்னூாட்டும்போது தீ மூண்டிருக்கக்கூடும் நம்பப்படுகிறது (படம்: சின் மின் நாளிதழ்) -

நியூ அப்பர் சாங்கி ரோட்டில் ஒரு கழக வீட்டில் ஏற்பட்ட தீச் சம்பவத்தில் ஒருவர் மாண்டார்.

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் மாண்டவருடன் வசித்த ஒன்பது குடும்ப உறுப்பினர்களை நேற்று சந்தித்தார். சம்பவம் ஆழ்ந்த கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டார். அந்த வீட்டில் வசித்த மற்றவர்கள் தற்காலிகத் தங்குமிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அத்தியாவசிப் பொருள்கள் அளிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் தமது ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி உறுப்பினர்கள் உதவிசெய்து வருவதாக துணைப் பிரதமர் தமது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.

சம்பவம் ஏற்பட்ட வீட்டின் அண்டைவீட்டுக்காரர்கள் 50 பேர் காயமின்றி வெளியேற்றப்பட்டது ஆறதல் அளிப்பதாக அவர் பதிவிட்டிருந்தார்.

தனிநபர் நடமாட்டச் சாதனம் தொடர்பிலான தீச்சம்பவங்கள் குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு திரு ஹெங் கேட்டுக்கொண்டார்.

நேற்று முன்தின் பிளோக் 27 நியூ அப்பர் சாங்கி ரோட்டில் உள்ள மூவறை வீட்டில் தீப் பிடித்தது.

மயக்கநிலையில் மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுச்செல்லப்பட்டனர்.

தனிநபர் நடமாட்டச் சாதனத்துக்கு மின்னூாட்டும்போது தீ மூண்டிருக்கக்கூடும் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.