இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி குறித்த ஆராய்ச்சி: சிங்கப்பூர்

இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி குறித்த ஆராய்ச்சி: சிங்கப்பூர்

1 mins read
13991981-864f-4779-be85-dd1bec3ddb42
இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி போடுவது பற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை (படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்) -

சிறுவர்களுக்குப் பூஸ்டர் தடுப்பூசி போடுவது, மற்ற வயதினருக்கு இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து கொவிட்-19 தடுப்பூசி நிபுணர்க் குழு ஆராய்ந்துவருகிறது.

அது குறித்த தகவல்கள் இன்னும் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாக மருத்துவச் சேவைகள் துறை இயக்குநர் கென்னத் மாக் குறிப்பிட்டார். மற்ற நாடுகளின் அனுபவங்களை சிங்கப்பூர் ஆராய்ந்துவருவதாக அவர் கூறினார்.

மற்ற வயதினர் தடுப்பூசிப் போட்டுக்கொண்ட பின்னரே 18 வயதுக்குக் குறைவானவர்கள் தடுப்பூசிப் போட்டுக்கொண்டதால், அவர்களுக்குத் தொற்றிலிருந்து அதிகமான பாதுகாப்பு இருப்பதாகப் போரசிரியர் மாக் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற கொவிட்-19 அமைச்சுகள் நிலை பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் அவர் இந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

வர்த்தகத், தொழில் அமைச்சர் கான் கிம் யோங், புதிய கொவிட்-19 கிருமி வகைகள் உருவெடுக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறினார். அதனால் கூடுதல் தடுப்பூசி தேவையா என்பது மறுஆய்வு செய்யப்படும் என்றார் அமைச்சர்.