விளையாட்டுகளுக்கான கொவிட்-19 விதிமுறைகள் திருத்தி அமைக்கப்படுகின்றன.
குழு விளையாட்டுகளில் கலந்து கொள்ளக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை யும் மார்ச் 15 முதல் அதிகரிக்கப்படும் என்று அமைச்சுகள் நிலை பணிக்குழு நேற்று அறிவித்தது.
ஆக்டிவ்எஸ்ஜி, அங்கீகாரம் பெற்ற தனியார் இடங்களில் மேற்பார்வையுடன் கூடிய குழு விளையாட்டுகளில் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 30 பேர் வரை கலந்துகொள்ள அனுமதிக்கப்படும்.
முகக்கவசங்களுடன் கூடிய 1,000க்கும் மேற்பட்ட மக்களுடன் பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி கிடைக்கும்.
என்றாலும் இதற்கு 50 விழுக்காடு என்ற கொள்ளளவு வரம்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

