கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்ந்து இறங்குமுகம்

கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்ந்து இறங்குமுகம்

2 mins read
e770e2e6-549b-41ea-b1e9-85b163106864
-

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று தொடர்ந்து குறைந்­து­வரு­கிறது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை நில­வரப்­படி, புதி­தாக 15,345 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்­பட்­டது. 1,396 பேர் மருத்­து­வ­மனை­யில் சிகிச்சை பெற்று வந்­தனர்.

ஒப்­பிட்டுப் பார்க்கையில், கடந்த வியா­ழக்­கி­ழமை 16,165 பேருக்­குத் தொற்று உறு­தி­யா­னது. அன்று மருத்­து­வ­மனை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டிருந்­தோர் எண்­ணிக்கை 1,450ஆக இருந்­தது.

முந்­திய வெள்­ளிக்­கி­ழ­மையுடன் ஒப்­பி­டு­கை­யில், கடந்த வெள்­ளிக்­கி­ழமை அன்­றாட புதிய தொற்று எண்­ணிக்கை குறைந்­துள்­ளது. முந்­திய வெள்­ளிக்­கி­ழமையன்று 17,564 பேருக்கு கொவிட்-19 கிருமி தொற்­றி­யி­ருந்­தது.

வாராந்­திர கொவிட்-19 தொற்று அதி­க­ரிப்பு விகி­தம் தொடர்ந்து 1க்குக்­கீழ் 0.92 ஆக உள்­ளது. மார்ச் 2ஆம் தேதி­யில் இருந்து தொடர்ந்து 10ஆவது நாளாக இந்த விகி­தம் 1க்குக்­கீழ் உள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

வியா­ழக்­கி­ழமை 6ஆக இருந்த மரண எண்­ணிக்கை நேற்று 13ஆகப் பதி­வா­னது. தீவிர சிகிச்சைப் பிரி­வில் 39 பேர் இருந்­தனர். 170 பேருக்கு உயிர்­வாயு தேவைப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் ஓமிக்­ரான் அலை உச்­சம் தொட்டு பிறகு தணிந்து வரு­வ­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கூறி இருக்­கி­றார்.

உள்­ளூ­ரில் கிருமி தொற்­றி­யோ­ரில் 13,215 பேருக்கு ஏஆர்டி பரி­சோ­தனை மூலம் தொற்று உறு­தி­யா­னது. இதர 1,915 பேருக்குத் தொற்று இருந்­தது பிசி­ஆர் பரி­சோ­தனை மூலம் கண்டு­பி­டிக்­கப்­பட்­டது.

வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­களில் 215 பேருக்­குத் தொற்று இருந்­தது. அவர்­களில் 76 பேருக்கு பிசி­ஆர் பரி­சோ­தனை மூல­மா­க­வும் 139 பேருக்கு ஏஆர்டி பரி­சோ­தனை மூல­மா­க­வும் தொற்று உறு­தி­யா­னது.

சிங்­கப்­பூ­ரில் வெள்­ளிக்­கி­ழமை நில­வ­ரப்­படி கொரோனா தொற்றுக்கு ஆளா­னோரின் மொத்த எண்­ணிக்கை 917,103 ஆனது. மொத்த மரண எண்­ணிக்கை 1,129 ஆகி­யது.

தகுதி பெற்­ற­வர்­களில் ஏறக்­கு­றைய 95 விழுக்­காட்­டி­னர் முழுமை­யாக தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

மொத்த மக்­களில் 69% பூஸ்டர் தடுப்­பூசி போட்­டுள்­ள­னர்.