சில சில்லறைப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும்

சில சில்லறைப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும்

2 mins read
b217f43e-60b6-4be3-8229-03d2cd164dbd
-

உக்­ரேன் மீதான ரஷ்ய படை­ ­எடுப்­பால் மோச­ம­டைந்து வரும் செலவு­கள் அதி­க­ரிப்­பால், சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் சில சில்­ல­றைப் பொருள்­களின் விலை­களை உயர்த்தி­யுள்­ளன. தற்­போ­தைய கொவிட்-19 பெருந்­தொற்­றால் ஏற்­படும் செலவு­கள், நடைமுறை சவால்­க­ளின் பின்­னணி­யில் இந்த அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

சில சில்­லறை விற்­ப­னை­யா­ளர்­கள் தங்­கள் விலை­களைச் சரி­செய்­தா­லும், மற்­ற­வர்­கள் தங்­கள் அடுத்த நகர்­வைத் திட்­ட­மி­டு­வ­தற்கு முன் மாறி வரும் போர் நிலை­மையை உன்­னிப்­பா­கக் கவ­னித்து வரு­கின்­ற­னர்.

"உக்­ரேன் நெருக்­கடி, வர்த்­த கத்தைச் சீர்­கு­லைத்து வணிக உணர்­வு­க­ளைக் குறைப்­பது மட்­டு­மல்­லா­மல், பய­னீட்­டா­ளர்­க­ளுக்கு சில விலை உயர்­வு­க­ளை­யும் ஏற்­ப­டுத்­தும் என்­றார்," சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் சங்­கத்­தின் தலை­வர் திரு கெர்ட் வீ.

"எண்­ணெய் மற்­றும் எரி­சக்தி விலை­கள் அதி­க­ரித்து வரு­வ­தால், வர்த்­த­கச் செல­வு­கள் அதி­க­ரிக்­கும். சந்­தை­யைச் சரி­செய்­ய­வும், வளங்களைப் பெறுவதில் மாற்று வழிகளைத் தேடவும் நேரம் எடுக்­கும். மேலும் அதிக செல­வில் சிக்கி­யுள்ள வர்த்­த­கங்­கள் அதற்­கேற்ப தங்­கள் விலை­களை மாற்­றி­ய­மைக்க வேண்­டி­யிருக்­கும்," என்­றும் அவர் கூறி­னார்.

எரி­சக்தி, போக்­கு­வ­ரத்து, விநி­யோ­கிப்­பா­ளர்­ பொருள்­க­ளின்­ உய­ரும் செல­வு­க­ளால், குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் உள்ள சில்­லறை விற்­ப­னை­யா­ளர்­கள் நெருக்­க­டியை எதிர்­கொள்­கின்றனர். இதனால் அவர்­கள் விலையை உயர்த்த வேண்­டி­யி­ருக்­கும் என்று கூறி­னார் பூன் லே வர்த்­த­கர்­கள் சங்­கத்­தின் தலை­வ­ரும் சிங்­கப்­பூர் வர்த்­த­கர் சங்­கங்­கள் சம்­மே­ள­னத்­தின் துணைத் தலை­வ­ரு­மான திரு குவெக் சியூ பெங்.

இந்த நெருக்­க­டி­யால் எண்­ணெய் விலை­கள், விமான சரக்கு செல­வு­கள் அதி­க­ரிப்பு, கூடு­தல் விநி­யோக சங்­கிலி தடை­க­ளுக்கு வழி­வ­குத்­தது என்று அறை­க­லன் சில்­லறை விற்­ப­னை­யா­ள­ரான கம்­யூன் லைஃப்ஸ்­டைல் நிறு­வ­னத்­தின் தலை­வர் திரு எர்னி கோ கூறி­னார்.

அதி­க­ரித்து வரும் செல­வு­களைச் சமா­ளிக்க அந்­நி­று­வ­னம் அதன் சில தயா­ரிப்­பு­க­ளின் விலையை 5% முதல் 10% வரை உயர்த்­தும். போர் நீடித்­தால் பய­னீட்­டா­ள­ரின் நம்­பிக்­கை­யும் விற்­ப­னை­யும் குறை­யும். அவர்­கள் மரப் பொருள்­க­ளுக்­குப் பதி­லாக அடிப்­படைத் தேவை­க­ளுக்கு அதி­க­மா­கச் செல­வி­ட­லாம் என்­றும் அவர் கூறி­னார்.

திரு கோவின் கருத்தை ஆமோ­தித்­தார் சிங்­கப்­பூர் சில்­லறை விற்­பனை­யா­ளர்­கள் சங்­கத்­தின் நிர்­வா­கக் குழு உறுப்­பி­னர் திரு ஜிம்மி கியாம்.

"நிச்­ச­ய­மற்ற தன்­மை­கள் நிலவும் போது, குறிப்­பாக அத்­தி­யா­வ­சி­ய­மற்ற பொருள்­க­ளுக்கு பெரும்­பாலான மக்­கள் தங்­கள் செல­வு­களைக் குறைத்துக்கொள்­வார்­கள். அவர்­கள் மலிவுச் சின்னப் பொருள் களையும் தேர்வு செய்­வார்­கள்," என்று அவர் கூறி­னார்.

அதி­க­ரித்து வரும் எண்­ணெய் விலை­கள் மற்­றும் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்­வால் விளை­யும் விலை மாற்­றங்­க­ளுக்கு முன், 'கோர்ட்ஸ் சிங்­கப்­பூர்' நிறு­வ­னம் அதன் மின்­சா­ரம், தக­வல் தொழில்­நுட்­பம், அறை­க­லன்­க­ளுக்­கான வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தேவை அதி­க­ரித்து வரு­கிறது என்று கூறி யது.

"போர் நீடித்­தால் எண்­ணெய், எரி­வாயு விலை­கள் மேலும் அதி­கரிக்­கும் என்ற கவ­லை­கள் உள் ளன. இது மின்­சாரத்தின் விலையை மேலும் உய­ர்த்தும் என்பதால் பொட்­ட­ல­மி­டு­தல் போன்ற பெட்­ரோ­லிய ரசா­ய­னத் தொழில்­கள் தொடர்பான பொருள்களின் உற்­பத்­தி­யைப் பாதிக்க­லாம்," என்­றார் சிங்கப்­பூர் உற்­பத்தி­யா­ளர் சம்­மே­ள­னத்­தின் தலை­மைச் செய­லா­ளர் திரு லாரன்ஸ் பெக்.