பிரின்செப் ஸ்திரீட் அருகே ஓடும் காரை ஒருவர் பிடித்துக் கொண்டு செல்வதை மற்றொரு காரில் உள்ள கேமராவில் பதிந்த காட்சிகளில் தெரிய வந்ததை அடுத்து, 36 வயதுமாது ஒருவர் ஆபத்தை விளைவிக்கும் செயலுக்காக கடந்த திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். இந்த விசாரணையில் 47 வயது ஆடவர் உதவி வருகிறார்.
பதிவான காணொளியில், வெள்ளை மேலாடை அணிந்த பெண், பிரின்செப் ஸ்திரீட்டிலிருந்து வெளையேறிய கறுப்பு நிற காரைத் துரத்திக்கொண்டு ஓடுவதைப் பார்க்க முடிந்தது. ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் காரைப் பிடித்திருந்த பெண், காருடன் இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் கார் சாலையோரத்தில் நின்றது.

