உடற்குறையுள்ளோர் விளையாட்டைத் தொடர ஊக்குவிக்க வேண்டும் என கால்கள் துண்டிக்கப்பட்ட முன்னாள் ஆசிரியர் நம்புகிறார்

மூன்று ஆண்­டு­களில் 10க்கும் மேற்­பட்ட அறுவை சிகிச்­சை­க­ளுக்­குப் பிறகு, திரு ஜேசன் லியோங்­கிற்கு ஒவ்­வொரு கையி­லும் நான்கு விரல்­கள் மட்­டுமே இருந்­தன. மேலும் இரண்டு கால்­க­ளி­லும் முழங்­கா­லுக்­குக் கீழே துண்­டிக்­கப்­பட்­டி­ருந்­தன.

44 வய­தான அவர் கடும் ரத்­த­வோட்­டத் தடை நோயால் பாதிக்­கப்­பட்­டார். இத­னால், அவ­ரது உடல் திசுக்­கள் உயி­ரி­ழந்துவிட்­டன. இது பொது­வாக கால்­வி­ரல்­கள், கைவிரல்­கள் உட்­பட கைக­ளை­யும் கால்­களை­யும் பாதிக்­கிறது.

ஏப்­ரல் 2019ல் தீவிர சிகிச்சைப் பிரி­வில் (ICU) இருந்த தீவிர விளை­யாட்டுப் பிரி­ய­ரும் முன்­னாள் உடற்­கல்வி ஆசி­ரி­ய­ரு­மான திரு லியோங், அதி­லி­ருந்து மீண்டு வரு வதில் உறு­தி­யாக இருந்­தார்.

உடற்­கு­றை­யுள்­ளோர் விளை­யாட்­டு­களை ரசிக்க உத­வு­வ­தற்­காக ஸ்போர்ட் சிங்­கப்­பூர் குழு­வில் தற்­போது பணி­யாற்­றும் திரு லியோங், 40 கிலோ எடை­யு­டன் மெது­வோட்­டத்­தி­லும் அமர்ந்து எழும் செய­லி­லும் ஈடு­பட முடி­யும். உட­லில் செயற்கை கரு­வி­கள் பொருத்­தப்­பட்ட அவர், வாரத்­தில் ஐந்து நாட்­கள் அதிக தீவி­ர­மான பயிற்­சி­களில் பங்­கேற்­கி­றார்.

கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று சிங்­கப்­பூர் உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்­கான பயிற்­சிக் கழ­கத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. அதன் மூலம் உடற்­கு­றை­யுள்­ளோர் போட்டி அள­வில் தங்­க­ளுக்கு விருப்­ப­மான விளை­யாட்­டு­க­ளைத் தொடர அதிக வாய்ப்­பு­களை உரு­வாக்க, தமது பய­ணம் தம்­மைப் போன்ற மற்­ற­வர்­க­ளை­யும் இதில் ஈடு­பட ஊக்­கு­விக்­கும் என்று அவர் நம்­பு­கி­றார்.

2019 ஏப்­ரல் 3ஆம் தேதி­யன்று அப்­போ­தைய உடற்­கல்வி ஆசி­ரி­ய­ரான திரு லியோங்­கின் வாழ்க்கை மாறி­யது. அவர் தனக்­குள் குளிர்ச்­சி­யான நிலையை அனு­ப­வித்­தார். விரை­வில் அவ­ருக்கு 41 டிகிரி செல்­சி­யஸ் காய்ச்­சல் ஏற்­பட்­டது. மாலை­யில், அவர் சிறு­நீ­ரில் ரத்­தத்­தின் தட­யங்­க­ளைக் கண்­ட­றிந்து தனது மனை­வி­யு­டன் மருத்­து­வ­மனைக்­குச் சென்­றார்.

மருத்­து­வ­ம­னையை அடை­வ­தற்­குள், அவ­ருக்கு சுய­நி­னைவு இழந்­தும் மீண்­டும் திரும்பி வந்­தும் கொண்­டி­ருந்­தது. நள்­ளி­ர­வுக்­குப் பிறகு, அவ­ரது கைவி­ரல்­கள், கால்­வி­ரல்­கள், உத­டு­கள் நீல நிற­மாக மாறின. அவர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­டார். மறு­நாள் மதி­யம், அவர் கோமா நிலைக்­குச் சென்­றார். அவ­ரது கல்­லீ­ரல், நுரை­யீ­ரல், சிறு­நீ­ர­கம் ஆகி­யவை செய­லி­ழக்­கத் தொடங்­கின.

"நான் வேக­மாக இறந்து கொண்­டி­ருந்­தேன். மருத்­து­வர்­கள் என் குடும்­பத்தை எனது மோச­மான நிலைக்­குத் தயார்­ப்ப­டுத்­தி­னார்­கள். என்­னி­ட­மி­ருந்து விடை­பெற என் மனை­வி­யி­டம் சொன்­னார்­கள்" என்று திரு லியோங் கடந்த செவ்­வாழ்க்­கி­ழமை தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­தார்.

இதற்­குக் கார­ணம், 'ஸ்ட்­ரெப்­டோ­காக்­கஸ் பி' என்ற பொது­வான கிரு­மி­யா­கும். பொது­வாக தொண்டை வலியை ஏற்­ப­டுத்­தும் இக்­கி­ருமி அவ­ரது ரத்த ஓட்­டத்­தில் நுழைந்­தது. அவ­ரைக் காப்­பாற்­றும் கடைசி முயற்­சி­யாக மருத்­து­வர்­கள் மாற்று மருந்­து­களை அவ­ரது உட­லில் செலுத்­தி­னர். அதிர்ஷ்­ட­வ­ச­மாக அந்த சிகிச்சை பல­ன­ளித்­தது.

ஆனால் அவ­ரது அவ­லம் தீர்ந்த பாடில்லை. அவ­ரது இடது காலில் இருந்த இரண்டு விரல்­கள் அவற்­றின் பயன்­பாட்­டைப் பாது­காக்க அவ­ரது வலது கையில் ஒட்­டப்­பட்­டன. ஜூன் 2019ன் பிற்­ப­கு­தி­யில், மருத்­து­வர்­கள் அவ­ரது வலது பாதத்­தை­யும் நவம்­ப­ரில் அவ­ரது இடது பாதத்­தை­யும் துண்­டிக்க வேண்­டி­யி­ருந்­தது.

இரண்டு குழந்­தை­க­ளின் தந்தை அவர், "என் உடல் பாகங்­கள் ஒவ்­வொன்­றாக வெட்­டப்­பட்­டன. ஒரு நல்ல கண­வ­னாக, தந்­தை­யாக, மனி­த­னாக இருக்க வேண்­டும் என்ற எனது கனவு சிதைத்து­விட்­டது," என்­றார்.

ஆனால், அவ­ரது குடும்­பத்­தி­னர், நண்­பர்­கள், மருத்­து­வக் குழு­வின் வலு­வான ஆத­ர­வு­டன், பல மணி­நேர இயன்­ம­ருத்­து­வம், உடல் செயல்­முறை சிகிச்சை ஆகி­ய­வற்­றின் மூலம் திரு லியோங் மெது­வாக தனது வலி­மையை மீட்­டெ­டுத்­தார்.

ஏப்­ரல் 2020ல், அவர் சக்­கர நாற்­கா­லி­யில் இருந்­த­போது மற்­றோர் ஆசி­ரி­ய­ரின் உத­வி­யு­டன் உடற்­கல்­வி­யைக் கற்­பிக்க இணை ஆசி­ரி­ய­ரா­கப் பள்­ளிக்­குத் திரும்­பி­னார். அந்த ஆண்டு அக்­டோ­பர் மாதத்­திற்­குள், அவர் கைத்­தடி இல்­லா­மல், செயற்­கைக் கால்­க­ளு­டன் சுதந்­தி­ர­மா­கச் சுற்றி வர முடிந்­தது.

மீண்­டும் விளை­யாட்­டிற்­குச் செல்­லத் தீர்­மா­னித்த திரு லியோங், உல­கெங்­கி­லும் உள்ள ஏரா­ள­மான உடற்­கு­றை­யுள்ள வீரர்­க­ளு­டன் தொடர்பு வைத்­தி­ருந்­தார். அத்­த­கை­யோ­ருக்கு ஏற்ற புதிய உடற்­பயிற்­சி­க­ளையும் அவர் கற்­றுக்­கொண்­டார்.

தற்­போது 'ஸ்போர்ட்­எஸ்ஜி' அமைப்­பில் உள்ள 'ஸ்போர்ட்­கேர்ஸ்' குழு­வில் மூத்த மேலா­ள­ராக இருக்­கும் திரு லியோங், மேலும் பல உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்கு உதவ நம்­பிக்­கை­யு­டன் இருக்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!