கட்டுமான ஊழியர்களின் வெப்ப அழுத்தம் பற்றிய ஆய்வு

கட்டுமான ஊழியர்களின் வெப்ப அழுத்தம் பற்றிய ஆய்வு

2 mins read
0362a07a-eb2b-4507-9ed3-57431bfa1d10
-

கட்­டு­மான ஊழி­யர்­கள் தங்­கள் பணி­யி­டங்­க­ளி­லும் தங்­கு­மி­டங்­களி­லும் வெப்ப அழுத்­தத்­திற்கு எவ்­வாறு பாதிக்­கப்­ப­டு­கி­றார்­கள் என்பது பற்­றிய புதிய ஆய்வை சிங்­கப்­பூ­ரின் அறி­வி­ய­லா­ளர்­கள் அடுத்த மாதம் தொடங்­கு­வார்­கள்.

வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட 40 ஊழி­யர்­களின் முக்­கிய வெப்­ப­நி­லை­யும் வெப்ப தேவை­களும் அவர்­கள் வேலை செய்­யும்போது கண்­கா­ணிக்­கப்­படும். இது ஊழி­யர்­க­ளின் வெப்ப அழுத்­தத்தைக் குறைக்க, தடுக்க அறி­வி­ய­லா­ளர்­கள் தீர்­வு­களை முன்­மொ­ழிய வழி­வ­குக்­கும்.

பரு­வ­நிலை மாற்­றம் அதிக வெப்­ப­நி­லை­யை­யும் அதிக வெப்ப அலை­க­ளை­யும் எதிர்­கா­லத்­தில் கொண்டு வரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தால் இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­ப­டு­வது மிக­வும் பொருத்­த­மா­ன­தாக இருக்­கும் என்று கரு­தப்­ப­டு­கிறது.

இந்த ஆய்வு 2020ல் தொடங்­கப்­பட்ட புரோ­ஜெக்ட் ஹீட்­சேஃப் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யா­கும். இது தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் உள்ள மக்­க­ளின் ஆரோக்­கி­யத்­தை­யும் வேலை உற்­பத்­தித்­தி­ற­னை­யும் உய­ரும் வெப்­ப­நிலை எவ்­வாறு பாதிக்­கிறது என்­ப­தைக் கண்­ட­றி­யும். இந்த ஆய்­வுத் திட்­டம் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் (என்­யு­எஸ்) நடத்­தப்­படும்.

அதி­க­ரித்து வரும் வெப்­ப­நிலை ஆசியா முழு­வ­தும் வெப்ப அலை­களின் அச்­சு­றுத்­தலை அதி­க­ரித்து வரு­கிறது. மேலும் இந்த நூற்­றாண்­டின் இறு­தி­யில் இந்த வட்­டா­ரத்­தில் உள்ள நாடு­கள் கடு­மை­யான வறட்சி நிலை­மை­க­ளால் பாதிக்­கப்­படும் என்று ஐக்­கிய நாடு­க­ளின் பருவநிலை அறி­வி­யல் அமைப்பு கடந்த மாதம் ஒரு புதிய அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் வெப்பம் தொடர்பான நிலைமைகள் ஈரப்­ப­தம், நகர்ப்­புற வெப்­பத்­தின் விளைவு ஆகி­ய­வற்­றால் அதி­க­ரிக்­கின்­றன.

பக­லில் கட்­ட­டங்­கள் நிறைந்த பகு­தி­களில் சேரும் வெப்­பம் இர­வில் வெளியாகிறது. அப்­படி என்­றால் இங்­குள்ள நகர்ப்­பு­றங்­கள் குறை­வான கட்­ட­டங்­கள் உள்ள இடங்­க­ளை­விட வெப்­ப­மா­ன­வை­யாக உள்­ளன.

"மாறி­வ­ரும் பரு­வ­நி­லை­யில் வெப்­பம் தொடர்­பான சிக்­கல்­க­ளால் அதி­கம் பாதிக்­கப்­ப­டு­வோர் திறந்­த­வெ­ளி­யில் வேலை செய்­யும் ஊழி­யர்­கள் அல்­லது காற்­றோட்­ட­ம் குறைவான சூழல்­களில் வசிப்­ப­வர்­கள் அல்­லது வேலை செய்­பவர்­கள், இதய நோய் போன்ற மருத்­துவ பிரச்­சி­னை­க­ளைக் கொண்ட மூத்­த­வர்­கள்," என்­றார் இந்த ஆய்­வின் முதன்­மை ஆய்­வா­ள­ரான என்­யு­எஸ்­ஸின் யோங் லூ லின் மருத்­து­வப் பள்­ளி­யின் இணைப் பேரா­சி­ரி­யர் ஜேசன் லீ.

ஊழி­யர்­கள் வெப்­பத்­தால் பாதிக்­கப்­ப­டு­கி­றார்­களா, அதை எப்­படி உணர்­கி­றார்­கள் என்­ப­தைக் கண்­ட­றி­ய­வும் ஆராய்ச்­சி­யா­ளர்­கள் முனை­வார்­கள். ஊழி­யர்­கள் தங்­கள் தங்கு­மி­டங்­களில் எப்­படி ஓய்­வெ­டுக்­கி­றார்­கள் என்­ப­தை­யும் அவர்­கள் கவ­னிப்­பார்­கள்.

"அவர்­கள் நன்­றாக ஓய்­வு எடுக்­க­வில்லை என்­றால், அது அவர்­க­ளின் ஒட்­டு­மொத்த வெப்ப அழுத்­தத்தை அதி­க­ரிக்­க­லாம். ஒவ்­வொரு வேலை நாளி­லும் அவர்­களின் தொடக்­க­நிலை எவ்­வாறு உள்­ளது என்­பது முக்­கி­ய­மா­னது," என்றார் பேரா­சி­ரி­யர் லீ.

ஆய்­வின் முடி­வு­களை வைத்து, ஊழி­யர்­கள் வெப்­பத்­தைச் சமா­ளிக்­க­வும், வெப்ப அழுத்­தத்­தின் அபா­யத்­தைக் குறைக்­க­வும் தீர்­வு­களை குழு முன்­மொ­ழி­யும்.