செயற்கை நுண்ணறிவு பற்றிய சிறுவர் புத்தகம்

செயற்கை நுண்ணறிவு பற்றிய சிறுவர் புத்தகம்

1 mins read
ebc114c3-1c17-40e9-9df3-26b37994fb02
-

பைனரி குறி­யீடு, இயந்­தி­ரக் கற்­றல், தரவு போன்­றவை ஆகி­யவை சிறு குழந்­தை­க­ளுக்குப் புரிந்­து­கொள்ள முடி­யாத சொற்­க­ளாக இருக்­க­லாம். ஆனால், தேசிய செயற்கை நுண்­ண­றிவுத் திட்­டத்­தால் நேற்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட குழந்­தை­க­ளுக்­கான புதிய கதைப் புத்­த­கத்­தின் மூலம் சிங்­கப்­பூர் செயற்கை நுண்­ண­றிவு அமைப்பு சிறு­வர்­களுக்கு இந்தச் சொற்­களைப் புரிய வைக்க விரும்­பு­கிறது.

கீழ் தொடக்­க­நிலை மாண­வர்­களை இலக்­கா­கக் கொண்டு, உரு­வாக்­கப்­பட்­டுள்ள இப்­புத்­த­கம், சிங்­கப்­பூர் செயற்கை நுண்­ண­றிவு அமைப்­பின் கல்­வி­ய­றி­வுத் திட்­ட­மான 'AI ஃபார் கிட்ஸ்' தொழில்­நுட்­பத்­தைப் புரிந்­து­கொள்­வ­தற்­கும் அதை எவ்­வாறு திறம்­ப­ட­வும் பொறுப்­பு­டன் பயன்­ப­டுத்­து­வது என்பது பற்­றி­யும் அவர்­க­ளுக்கு முதல் முறை­யாக விளக்கிச் சொல் கிறது.

மெட்டா அமைப்­பின் நிதி­யா­த­ர­வு­டன் 'டெய்சி அண்ட் ஹெர் ஏஐ ஃபிரண்ட்ஸ்' என்ற தலைப்­பி­லான விளக்­கப்­பட புத்­த­கத்­தின் 10,000 இல­வசப் பிர­தி­கள் குறைந்த வரு­மா­னம் கொண்ட குடும்­பங்­க­ளுக்கு வழங்­கப்­படும். புத்­த­கங்­கள் பொது நூல­கங்­களில் வைக்­கப்­படும். ஆனால் அது விற்­கப்­ப­டாது.

புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சிங்­கப்­பூர் செயற்கை நுண்­ண­றிவு அமைப்­பின் மூத்த துணை இயக்குநர் கூ செங் மெங், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு செயற்கை நுண்­ண­றிவு கருத்துகளைப் பற்றி அனைவரும் அறிய பிரதிகள் வழங்கப்படும் என்றார்.

தொடக்க விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட கல்வி, மனி­த­வள துணை அமைச்­சர் கான் சியோ ஹுவாங், குழந்­தை­கள் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­படுத்­தும் விதத்­தைப் பெருந்­தொற்று மாற்­றி­ய­மைத்­துள்­ளது என்­றும் மின்­னி­லக்­கத் திறன்­கள் இன்று வேலை­களில் அதிக முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றன என்­றும் கூறி­னார்.