அனைத்துலக விண்வெளி நிலையத்தில் சிங்கப்பூர் கலைஞர் லட்சுமி மோகன்பாபு வடிவமைத்த கலைப்பொருள்கள் 

சிங்கப்பூர் கலைஞர் லட்சுமி மோகன்பாபு வடிவமைத்த இரண்டு கலைப்பொருள்கள் தற்போது அனைத்துலக விண்வெளி நிலையத்தில் பூமியைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றன.

விண்வெளி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலவுக் கலைக்கூடத்தில் அவை வைக்கப்பட்டுள்ளன.

அனைத்துலகக் கலைஞர்கள் உருவாக்கிய 64 மிகச் சிறிய கலைப்பொருள்கள் அந்த கலைக்கூடத்தில் இடம்பெற்றுள்ளன.

சரக்கு விண்கலம் மூலம் கொண்டு செல்லப்பட்ட அந்தக் கலைப்பொருள்கள் திங்கள் (மார்ச் 14) அன்று விண்வெளி நிலையத்தை அடைந்தன.

அடுத்த 10 மாதங்களுக்கு அவை அங்கு இருக்கும்.

வெவ்வேறு மூலப்பொருள்கள் கொண்டு வெவ்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்ட கலைப்பொருள்கள் விண்வெளியில் எவ்வாறு தாக்குப்பிடிக்கின்றன என்பதைக் கலைஞர்கள் அறிந்துகொள்வது இதன் நோக்கம். ர்கள்.

வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 100 கலைப்பொருள்களை நிரந்தரமாக நிலவுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப் படுகிறது.

திருவாட்டி லட்சுமி மோகன்பாபு வடிவமைத்த இரண்டு கலைப்பொருள்களும் கன சதுரம் வடிவம் கொண்டவை.

அதன் ஒவ்வொரு பக்கமும் 0.98 செ.மீ. நீளம் கொண்டது.

முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட அவற்றில் தனித்தன்மை வாய்ந்த வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக நிபுணர்கள் அந்தப் பொருள்களை அச்சிட்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!