எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் (எஸ்எம்டி) 2045ஆம் ஆண்டு வாக்கில் நிதிக்காக சார்ந்திராத நிலையை எட்டக்கூடும் என்று அதன் இயக்குநரும் முன்னாள் இடைக்கால தலைமை நிர்வாகியுமான பேட்ரிக் டேனியல் தெரிவித்துள்ளார்.
"இந்த இலக்கை எட்ட திறனாளர்களை தன்வசப்படுத்துவது, அவர்களைத் தக்கவைத்துக் கொள்வது மற்றும் ஊழியர் ஈடுபாடு போன்ற அம்சங்களின் மீது கவனம் செலுத்தக்கூடிய முன்னோக்கிய கொள்கைகள் இந்
நிறுவனத்திற்குத் தேவைப்படும்.
"அதேநேரம் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதையும் அது தொடர வேண்டும்," என்றார் அவர்.
கொள்கை ஆய்வுக் கழகம் நேற்று நடத்திய கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று திரு டேனியல் உரை நிகழ்த்தினார். இது கழகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையாகக் காண்பிக்கப்பட்டது.
"பெரிய அளவிலான தரவுப் பயன்பாடு, ஏற்கெனவே பல்வேறு இடங்களின் செய்தி அறைகளில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு போன்றவற்றால் புத்தாக்கத்தைத் தொடர்ந்து எடுத்துச் செல்லமுடியும்.
"இதுபோன்றவற்றில்தான் எஸ்எம்டி பெரிய அளவிலான முன்னேற்றத்தை எட்ட முடியும் என்
பதோடு அரசாங்கமும் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டு நிதியளிப்பதும் இதனை நோக்கித்தான்.
"சந்தா விற்பனையை எஸ்எம்டி அதிகப்படுத்த வேண்டும். சந்தா மூலமான வருவாய் எஸ்எம்டி வருவாயில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ய வேண்டும்.
"இதனுடன், வாடிக்கையாளர்
களைத் திருப்திப்படுத்துவதிலும் அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். விளம்பர வருவாய் சரிவைத் தடுத்து அதனை உயர்த்துவதற்கான புதிய உத்திகளை இந்நிறுவனம் கண்டறிய வேண்டும். பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் நம்பத்தகுந்த செய்தி களைத் தந்து சமூகத்தின் பெருத்த ஆதரவைப் பெறுவதும் அவசியம்," என்று திரு டேனியல் கூறினார்.

