உணவு விநியோகத்தில் நேரடி தாக்கத்தை போர் ஏற்படுத்தாது

உணவு விநியோகத்தில் நேரடி தாக்கத்தை போர் ஏற்படுத்தாது

2 mins read
a19b5e22-eef5-4b23-b790-8bba9485d2c2
-

உக்­ரே­னில் இருந்து முட்டை, சமை­யல் எண்­ணெய் போன்­ற­வற்­றை­யும் ரஷ்­யா­வி­லி­ருந்து கட­லு­ணவு, மது­பான வகை­கள் போன்ற­ வற்­றை­யும் சிங்­கப்­பூர் இறக்­கு­மதி செய்­தா­லும் அவற்­றின் அளவு குறைவு என சிங்­கப்­பூர் உணவு அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

இருப்­பி­னும் இந்த இரு ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு இடை­யி­லான பூசல், எண்­ணெய் விலை உயர்­வுக்­குக் கார­ண­மாக அமை­கிறது.

கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிப்­ப­டைந்த உணவுப் பொருள் விநி­யோ­கச் சங்­கி­லியை இது மேலும் மோச­ம­டை­யச் செய்­யும்.

உல­க­ளா­விய உண­வுப் பொருள் விலை ஏற்­றத்­திற்­கான நெருக்­க­டியை இந்த இரு கார­ணி­களும் ஏற்­ப­டுத்­தும் என்று சொல்­லப்­ப­டு­கிறது.

இங்­குள்ள ஃபேர்பி­ரைஸ், டெய்ரி ஃபார்ம் மற்­றும் ஷெங் சியோங் போன்ற பேரங்­கா­டி­கள், தங்­க­ளி­டம் அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள் போது­மான கையி­ருப்பு இருப்­ப­தை­யும் அவற்­றின் விலை­கள் கட்­டுப்­ப­டி­யா­கக் கூடி­ய­தா­கத் தொட­ரு­வ­தை­யும் உறு­தி­செய்ய பல­த­ரப்­பட்ட விநி­யோகத் தளங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­கின்­றன.

உதா­ர­ணத்­திற்கு, ஃபேர்பி­ரை­ஸின் இறக்­கு­ம­திப் பொருள்­கள் 100க்கும் மேற்­பட்ட நாடு­க­ளி­லி­ருந்து தரு­விக்­கப்­ப­டு­கின்­றன.

ஒட்­டு­மொத்­த­மாக, தற்­போது 170க்கும் மேற்­பட்ட நாடு­கள் மற்­றும் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து உண­வுப் பொருள்­களை சிங்­கப்­பூர் இறக்­கு­ம­தி செய்­வ­தாக சிங்­கப்­பூர் உணவு அமைப்பு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளி­டம் கூறி­யது.

ரஷ்ய-உக்­ரேன் போர் நிலவரத்­தைத் தாங்­கள் உற்­றுக் கவ­னித்து வரு­வ­தாக பேரங்­கா­டிக் குழு­மங்­கள் அத­னி­டம் தெரிவித்­தன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இவ்­விரு நாடு­களும் உலக அள­வில் உணவு தானி­யம் மற்­றும் சமை­யல் எண்ெணய் போன்ற அத்தியாவசியப் பொருள்­க­ளின் ஆகப் பெரிய அளவிலான விநி யோகத்தை மேற்கொள்பவை.

ஆனால், இந்­தப் போரால் தங்­க­ளுக்கு எவ்­வித இடை­யூ­றும் ஏற்­ப­ட­வில்லை என்று ஷெங் சியோங் பேரங்­காடி ேபச்­சா­ள­ரான பெண்­மணி ஒரு­வர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம் ஸிடம் தெரி­வித்­தார்.