கப்பல் மின்னூட்டக் கட்டமைப்புக்காக 7 குழுமங்கள் கைகோப்பு

கப்பல் மின்னூட்டக் கட்டமைப்புக்காக 7 குழுமங்கள் கைகோப்பு

1 mins read
cdd25616-814e-4e3c-8b60-73e6ce41c77f
-

சிங்­கப்­பூ­ரின் கட­லோர விநி­யோக முறையை சீர­மைக்க ஏழு குழு­மங்­கள் கூட்டு சேர்ந்­துள்­ளன. அவை இதற்­காக $20 மில்­லி­ய­னுக்கு மேல் முத­லீடு செய்ய உள்­ளன.

ஷாங்ரி-லா சிங்­கப்­பூர் ஹோட்­ட­லில் நேற்று நடை­பெற்ற சந்­திப்­பின்­போது 'கட­லோர நீடித்த நிலைத்­தன்மை கூட்­டணி' ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. இக்­கூட்­டணி பல்­வேறு யோச­னை­களை முன்­வைத்­தள்­ளது.

ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) பறக்­கத் தொடங்­கும் தள­மா­கப் பயன்­ப­டக்­கூ­டிய கப்­பல்­கள், மின்­சா­ரப் பட­கு­கள் போன்­ற­வற்­றுக்­கான கடல்­துறை கம்­பி­யில்லா இணை­யத் தொடர்பு மின்­னூட்ட வச­தி­கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தும் அந்த யோச­னை­க­ளுள் அடங்­கும்.

ஒரே இடத்­தில் அமைந்­தி­ருக்­கக்­கூ­டிய மின்­னூட்ட மையத்­து­டன் நட­மா­டும் மின்­னூட்ட மைய­மும் அடங்­கிய கட்­ட­மைப்பு ஒன்றை இக்­கூட்­டணி உரு­வாக்­கும். மின்­சார கார்­கள் பயன்­ப­டுத்­திய மின்­

க­லன்­களை மறுசீர­மைத்து கப்­பல்­

க­ளுக்­கான மின்­சார விநி­யோ­கத்­திற்­குப் பயன்­ப­டுத்­து­வ­தன் மூலம் மின் பொருள் கழி­வைத் தடுக்க முடி­யும். குவோக் (சிங்­கப்­பூர்) மரி­டைம் குரூப், ஏ*ஸ்டார் அமைப்பு, ஜென்­பி­ளஸ், ஜூரோங் போர்ட் சிங்­கப்­பூர், டிகாம்ஸ், சீ ஃபாரஸ்ட் மற்­றும் டெஸ் ஆகிய குழு­மங்­கள் ஒன்று சேர்ந்து இந்­தக் கூட்­ட­ணியை அமைத்­துள்­ளன.