லீ குவான் இயூ உலக நகரப் பரிசை வியன்னா வென்றது

லீ குவான் இயூ உலக நகரப் பரிசை வியன்னா வென்றது

2 mins read
b36d2dae-8515-4f38-af32-d0e40f2de0f4
-

2020 லீ குவான் இயூ உலக நக­ரத்­திற்­கான பரிசை வியன்னா நகர் தட்­டிச் சென்­றுள்­ளது.

துடிப்­பு­மிக்க, வாழ்­வ­தற்கு ஏற்ற, நீடித்து நிலைக்­கக்­கூ­டிய நகர சமூ­கங்­களை சிறந்த முறை­யில் உரு­வாக்­கும் நக­ரங்­க­ளுக்கு இந்­தப் பரிசு ஈராண்­டுக்கு ஒரு­முறை வழங்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரின் நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­ய­மும் வாழ்­வ­தற்­கேற்ற நக­ரங்­க­ளுக்­கான மையமும் இணைந்து ஏற்­பாடு செய்­யும் இந்­நி­கழ்­வுக்கு கெப்­பல் கார்ப்­ப­ரே­ஷன் பொறுப்­பா­த­ரவு வழங்­கு­கிறது.

பரிசை வென்­றுள்ள ஆஸ்­தி­ரிய தலை­ந­க­ரான வியன்னா, வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 3 வரை இங்கு நடை­பெற உள்ள உலக நக­ரங்­க­ளின் உச்­ச­நி­லைச் சந்­திப்­பின்­போது கௌர­விக்­கப்­படும்.

விருது சான்­றி­தழ், தங்­கப் பதக்­கம் ஆகி­ய­வற்­றோடு $300,000 ரொக்­கப் பரி­சும் கெப்­பல் கார்ப்­

ப­ரே­ஷன் பொறுப்­பா­த­ர­வில் வழங்­கப்­படும்.

கலா­சா­ரம், இசை மற்­றும் வர­லாறு ஆகி­ய­வற்­றுக்­குப் புகழ்­பெற்ற நக­ரம் என்­றும் தலை­சி­றந்த அடை­யா­ளத்தை இழக்­கா­மல் 21ஆம் நூற்­றாண்­டின் வெற்­றிக்­குத் தன்­னைத் தானே தயார்ப்­ப­டுத்­திக்­கொண்ட நக­ரம் வியன்னா.

மேலும் பரு­வ­நிலை மாற்­றத்­தின் உலக சவால்­க­ளைச் சமா­ளிப்­ப­தில் உல­குக்கு ஓர் எடுத்­துக்­காட்­டாக இது விளங்­கு­கிறது.

உதா­ர­ணத்­திற்கு, வெப்­பத் தணிப்­புத் திட்­டங்­களை அந்­ந­கர் வெற்­றி­க­ர­மா­கச் செயல்­ப­டுத்து கிறது.

கிரா­மப்புறங்­க­ளைக் காட்­டி­லும் அதிக வெப்­பத்­து­டன் இருக்­கும் நக­ரங்­களில் அதி­க­மான பசுமை வெளி­களை ஏற்­ப­டுத்­தும் திட்­டங்­களும் அவற்­றுள் அடங்­கும்.

மேலும், வெள்­ளத்­தி­லி­ருந்து பாதுகாப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை 1884ஆம் ஆண்டு முதல் இந்த நக­ரம் செயல்­ப­டுத்தி வரு­கிறது.

அதன் ஒரு பகு­தியாக 'நியூ டேனுப்' என்ற பெய­ரில் 1989ஆம் ஆண்டு 21 கிலோ மீட்­டர் நீள மாற்­றுப் பாதையை அது அமைத்­தது. வெள்­ளம் ஏற்­ப­டாத வேளை­யில் இது பொதுப் பூங்­கா­வாக மாறும் வகை­யில் இது அமைக்­கப்­பட்­டது.