மோட்டார்சைக்கிள் சிஓஇ ஏலத்திற்கான வைப்புத்தொகை $800க்கு அதிகரிப்பு

மோட்டார்சைக்கிள் சிஓஇ ஏலத்திற்கான வைப்புத்தொகை $800க்கு அதிகரிப்பு

2 mins read
b1732460-1afe-4090-b91f-385f7e6b195c
மோட்டார்சைக்கிள்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் ஆக அண்மைய ஏலத்தில் புதிய உச்சத்தைத் தொட்டது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மோட்­டார்­சைக்­கிள்­க­ளுக்­கு­ரிய வாகன உரி­மைச் சான்­றி­தழ் (சிஓஇ) ஏலத்­திற்­கான வைப்­புத்­தொகை 200 வெள்­ளி­யி­லி­ருந்து 800 வெள்­ளிக்கு உயர்த்­தப்­பட உள்­ளது.

மேலும், இந்­தப் பிரி­வுக்­கான சான்­றி­த­ழின் செல்­லு­படி காலம் மூன்று மாதம் என பாதி­யா­கக் குறைக்­கப்­பட உள்­ளது. இந்த மாற்­றங்­களை நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று அறி­வித்­தது. மார்ச் மாதத்­தின் இரண்­டா­வது ஏலம் அடுத்த வாரம் தொடங்­கும்­போது இந்த மாற்­றங்­கள் நடப்­புக்கு வரும்.

விவே­க­மான ஏல நடை­மு­றையை ஊக்­கு­விக்க இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக ஆணை­யம் தெரி­வித்­தது. மோட்­டார்­சைக்­கிள் வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ணம் அண்­மைய ஆண்­டு­க­ளாக புதிய உச்­சத்­தைத் தொட்டு வரு­கிறது. குறிப்­பாக, கடந்த புதன்­

கி­ழமை இடம்­பெற்ற ஆக அண்­மைய ஏலத்­தில் அதன் கட்­ட­ணம் $11,400 என இது­வரை காணாத உச்­சத்­திற்­குச் சென்­றது. பிப்­ர­வரி 23ஆம் தேதி நடை­பெற்ற ஏலத்­தில் இது $10,589 ஆக இருந்­தது. உயர்வு விகி­தம் 7.66 விழுக்­காடு.

மோட்­டார்­சைக்­கிள் விலை­கள் கடு­மை­யாக ஏறு­வ­தற்கு பெரிய விநி­யோ­கிப்­பா­ளர்­க­ளின் ஊக வணி­கமே முக்­கிய கார­ணம் என வாக­னத் தொழில் துறை­யி­னர் அடிக்­கடி கூறி­வந்­த­னர். இந்­தப் போக்­கைக் கட்­டுப்­ப­டுத்த, வைப்­புத் தொகையை உயர்த்த அவர்­கள் பரிந்­து­ரைத்­தி­ருந்­த­னர். வாகன உரி­மைச் சான்­றி­தழ் பெற்ற பின்­னர் மோட்­டார்­சைக்­கி­ளைப் பதிவு செய்­யாத விநி­யோ­கிப்­பா­ள­ரின் வைப்­புத் தொகை பறி­போ­கும் என்­ப­தால் அவர்­கள் அந்­தக் கோரிக்­கையை முன்­வைத்து வந்­த­னர்.

சான்­றி­தழ் செல்­லு­படி காலத்­தைக் குறைப்­ப­தும் ஊகத்தை முறி­ய­டிப்­ப­தற்­கான ஒரு தீர்­வா­கப் பார்க்­கப்­ப­டு­கிறது. கார­ணம், சான்­றி­தழ் பெற்ற பின்­னர் உண்­மை­யான வாங்­கு­வோரை குறைந்த காலத்­திற்­குள் கண்­டு­பி­டிக்க வேண்­டிய கட்­டா­யம் ஏலத்­தில் வென்­ற­வர்­க­ளுக்கு ஏற்­படும். மேலும், பயன்­ப­டுத்­தப்­ப­டாத சான்­றி­தழ்­கள் மிக விரை­வாக ஏல நடை­மு­றைக்கே திரும்ப வந்­து­வி­டு­வ­தன் பொரு­ளா­க­வும் இத­னைப் பார்க்­க­லாம் என்று ஆணை­யம் குறிப்­பிட்­டது.

ஏலத்­திற்­கான வைப்­புத்­தொ­கையை 1,000 வெள்­ளிக்கு உயர்த்து ­மாறு தங்­க­ளது சங்­கம் பரிந்­துரைத்து இருந்­த­தாக சிங்­கப்­பூர் மோட்­டார் சைக்­கிள் வர்த்­த­கர் சங்­கத் தலை­வர் ரெக்ஸ் டான் கூறி­னார். "இதனை ஓராண்­டுக்கு முன்­னரே அறி­மு­கம் செய்­தி­ருந்­தால் குறிப்­பிட்ட பலனை கண்­டி­ருக்க முடி­யும். விலை­கள் தாறு­மா­றாக ஏறி­யி­ருக்­காது," என்­றார் அவர்.