ஜூரோங்கில் $150 மி. செலவில் மாபெரும் 'சேட்ஸ்' உணவு மையம்

ஜூரோங்கில் $150 மி. செலவில் மாபெரும் 'சேட்ஸ்' உணவு மையம்

2 mins read
1e131d21-56fd-4ac2-abb4-3aaf6de69727
பாண்டான் லூப்பில் பல்வேறு இடங்களில் உணவு தயாரிப்பதை ஒரே இடத்தில் புதிய மையத்திற்குள் கொண்டு வரப்படும் என்று 'சேட்ஸ்' நேற்று தெரிவித்தது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

விமா­னங்­களில் உயர்­தர உணவு வகை­களை விநி­யோ­கிப்­பதை முக்­கிய தொழி­லா­கக் கொண்­டுள்ள 'சேட்ஸ்' நிறு­வ­னம், தனது தொழி­லுக்­காக 150 மில்­லி­யன் செல­வில் மாபெ­ரும் உணவு மையத்தை அைமக்­கப்­போ­வ­தாக நேற்று அறி­வித்­தது.

இந்த நிலை­யம், ஜூரோங் புத்­தாக்க மாவட்­டத்­தில் அமையும்.

இதற்­காக 30 ஆண்டு குத்­த­கைக் காலத்­து­டன் கூடிய நிலத்தை ஜேடிசி கார்ப்­ப­ரே­ஷ­னி­ட­மி­ருந்து பெற்­றுள்­ள­தாக நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் 'சேட்ஸ்' குறிப்­பிட்­டது.

வரும் 1ஆம் தேதி­யி­லி­ருந்து தொடங்­கும் குத்­த­கைக் காலத்­தின் மொத்த வாட­கை­யின் மதிப்பு $42.6 மில்­லி­யன் ஆகும்.

தற்­போது பாண்­டான் லூப்­பில் ஜேடி­சி­யின் பல்­வேறு குத்­தகை இடங்­களில் சேட்ஸ் தனது உணவு விநி­யோ­கிப்­புத் தொழிலை நடத்தி வரு­கிறது.

இவை அனைத்­தும் புதிய உணவு மையத்­துக்கு மாற்­றப்­படும்.

நவீன தானி­யக்க உண­வுத் தயா­ரிப்பு சாத­னங்­கள், இணை­யம் மூல­மாக இயக்­கப்­படும் வச­தி­கள் ஆகி­ய­ற்­று­டன் உணவு மையம் ஆற்­ற­லு­டன் செயல்­படும் என்று சேட்ஸ் கூறி­யது.

புதிய பொருள்­கள் மற்­றும் சேவை­களை சோதிக்­கும் நிலை­ய­மா­க­வும் அது இருக்­கும்.

புதிய சந்­தை­களில் உண­வுக்­கான தீர்­வு­களை வர்­த­த­க­ம­ய­மாக்­கும் வச­தி­களும் புதிய மையத்­தில் ஏற்­ப­டுத்­தப்­படும்.

புதிய உணவு மையம் அமைக்கப்­ ப­டு­வ­தா­லும் குத்­தகை ஒப்­பந்­தத் தாலும் 2022 மார்ச் 31ஆம் தேதி முடி­வ­டை­யும் நிதி­யாண்­டில் நிறு­வ­னத்­தின் சொத்­தி­லும் வரு­மா­னத்­தி­லும் பெரிய அளவு தாக்­கம் இருக்காது என்று சேட்ஸ் நேற்று தெரி­வித்­தது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிங்­கப்­பூ­ரின் பிர­தான பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­டப்­பட்டு உள்ள சேட்ஸ் நிறு­வ­னத்­தின் ஒரு பங்கு, 0.5 விழுக்­காடு அல்­லது இரண்டு காசு கூடி 3.92 வெள்­ளிக்கு பரி­வர்த்­தனை செய்­யப்­பட்­டதாக தெரி விக்கப்பட்டது.