போர், தடைகள்; பாதிப்புகளை ஆராயும் சிங்கப்பூர் நிறுவனங்கள்

போர், தடைகள்; பாதிப்புகளை ஆராயும் சிங்கப்பூர் நிறுவனங்கள்

2 mins read
c1e9208c-dd23-4926-91b3-43e336101c0d
-

உக்­ரே­னிய போரும் ரஷ்யா மீதான தடை­களும் எத்­த­கைய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­பதை சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் மதிப்­பீடு செய்து வரு­கின்­றன.

அமெ­ரிக்கா, சிங்­கப்­பூர், ஐரோப்­பிய நாடு­கள் உட்­பட பல நாடு­கள் ரஷ்யா மீது பல்­வேறு தடை­களை விதித்­துள்­ளன.

இந்­தத் தடை­க­ளால் உலக அள­வில் பல துறை­களில் பல்­வேறு பாதிப்­பு­கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலை­யில் உக்­ரே­னிய போர் மற்­றும் ரஷ்­யா­வுக்கு எதி­ரான தடை­க­ளின் தாக்­கத்தை முழு­மை­யா­கப் புரிந்­து­கொள்ள சில காலம் பிடிக்­கும் என்று சிங்­கப்­பூர் தொழில்­து­றை­யி­ன­ரும் வர்த்­தக சங்­கங்­களும் தெரி­வித்­துள்­ளன.

உக்­ரேன் மீது படை­யெ­டுத்­துள்ள ரஷ்­யா­வைக் கண்­டிக்­கும் வகை­யில் அந்­நாட்­டுக்கு எதி­ராக விதிக்­கப்­பட்ட தடை­கள் குறித்து இம்­மா­த­தொடக்­கத்­தில் கூடு­தல் விவ­ரங்­களை சிங்­கப்­பூர் அர­சாங்­கம் வெளி­யிட்­டது.

மின்­ன­ணு­வி­யல் பொருள்­கள் உட்­பட குறிப்­பிட்ட பொருள்களை ரஷ்­யா­வுக்கு ஏற்­று­மதி செய்ய தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் உள்ள வங்­கி­களும் இதர நிதி நிறு­வ­னங்­களும் ரஷ்­யா­வின் நான்கு வங்­கி­க­ளு­டன் வர்த்­த­கங்­களில் ஈடு­ப­ட­வும் தடை விதிக்கப்பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து கப்­பல் மூலம் ஏற்­று­மதி செய்­யப்­படும் அல்­லது சிங்­கப்­பூர் வழி­யா­கச் செல்­லும் பொருட்­க­ளுக்­கும் தடை பொருந்­தும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் ஏற்­று­மதி கட்­டுப்­பா­டு­க­ளால் சிங்­கப்­பூர் ராணு­வப் பொருள்­க­ளின் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்ள அனைத்­துப் பொருள்­கள், கணினி சில்­லு­கள், உயர்­சக்தி, உயர் அழுத்த நேரடி மின்­சார விநி­யோ­கச் சாத­னங்­கள், மின்­னி­லக்­கச் சில்­லு­கள், கணினி, தொலை­த்தொ­டர்பு இடை­ம­றிப்பு சாத­னங்­கள் ஆகியவை பாதிக்­கப்­படும்.

சிங்­கப்­பூர் வர்த்­தக சம்­மே­ள­னத்­தின் தலைமை நிர்­வா­கி­யான லாம் யி யோங், சிங்­கப்­பூர் விதித்­துள்ள தடை­க­ளா­லும் 'நட்­பற்ற நாடு­கள்' என்று ரஷ்­யா­வால் குறிப்­பி­டப்­படும் நாடு­க­ளு­டன் போட்­டுள்ள வர்த்­தக ஒப்­பந்­தங்­கள் மீதான ரஷ்­யா­வின் நட­வ­டிக்­கை­க­ளா­லும் பாதிப்பு ஏற்­படும் என்று கூறி­யுள்­ளார்.

"ரஷ்ய நிறு­வ­னங்­க­ளு­ட­னான வர்த்­தக நட­வ­டிக்­கை­ளில் சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் எச்­ச­ரிக்­கை­யு­டன் செயல்­பட வேண்­டும்," என்று வலி­யு­றுத்­தி­யுள்ள அவர், "தேவை ஏற்­பட்­டால் சட்ட ஆலோ­ச­னை­களை நாட­லாம்," என்று அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

தொழில்­ச­பை­யில் உறுப்­பி­னர் ­க­ளாக உள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு உதவி வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள ரஷ்ய வர்த்­த­கப் பிர­தி­நி­தி­யான அலெக்­சாண்­டர் ஸ்வி­னின், நூற்­றுக்­க­ணக்­கான ரஷ்­யத் தொழில்­மு­னை­வோர்­கள் சிங்­கப்­பூ­ரு­ட­னும் ஏரா­ள­மான சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­க­ளு­ட­னும் வர்த்­த­கத் தொடர்­பு­களை வைத்­தி­ருப்­ப­தா­க­வும் ரஷ்­யா­வில் வர்த்­த­கங்­களில் ஈடு­ப­டு­வ­தா­க­வும் தெரிவித் தார்.

ஆனால் சிங்­கப்­பூர் ஏற்­று­மதி கட்­டுப்­பாடு­க­ளால் இங்­குள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு ஏற்­படும் பாதிப்­பு குறித்து கருத்து தெரி­விக்க அவர் மறுத்துவிட்­டார்.

பாதிப்­பைத் தெரிந்­து­கொள்ள சில காலம் ஆக­லாம் என்­றார் அவர்.

ரஷ்­யா­வு­ட­னான சிங்­கப்­பூர் வர்த்­த­கப் பொருள்­க­ளின் மதிப்பு 2021ல் ஐந்து பில்­லி­யன் வெள்­ளி­யா­கும். சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து மின்­ன­ணு­வி­யல் மற்­றும் சாத­னங்­கள் அதிக அள­வில் ரஷ்­யா­வுக்கு ஏற்று­ மதி செய்­யப்­ப­டு­கின்­றன. ரஷ்­யாவில் இருந்து பெட்­ரோ­லி­யம், உலோ­கங்­களை சிங்­கப்­பூர் அதி­கம் இறக்­கு­மதி செய்து வரு­கிறது.