சொத்து முகவர்கள்போல செயல்படும் மோசடிக்கார்கள் குறித்து சொத்து விற்பனை நிறுவனமான 'ஹட்டன்ஸ்' எச்சரித்துள்ளது.
வீட்டு உரிமையாளர்களும் வாடகை வீட்டுக்காரர்களும் கவனமாக இருக்கும்படி அது கேட்டுக்கொண்டது.
வாடகைதாரர்களிடம் பணத்தை ஏமாற்றியதாகக் கூறப்படும் போலி சொத்து முகவர்களின் சம்பவங்கள் குறித்து தங்களுக்குத் தெரிய வந்ததை யடுத்து ஹட்டன்ஸ் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
சில இணையத் தளங்களில் போலியான சொத்து விவரங்களை வெளியிட்டு அவற்றின் சொத்து முகவர்களாக மோசடிக்காரர்கள் செயல்படுகின்றனர். இதற்காக 'சிஇஏ' எனப்படும் சொத்து முகவை மன்றத்தின் போலி அடையாள அட்ைடகளையும் அவர்கள் பயன்படுத்து வதாக 'ஹட்டன்ஸ்' குறிப்பிட்டது.
சிஇஏ, சொத்து நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் அரசாங்க அமைப்பாகும். மோசடி குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய ஹட்டன்ஸ் பேச்சாளர் ஒருவர், வாடகை வீடுகளைத் தேடுவோரை மோசடிக்காரர்கள் குறி வைப்பதாகக் கூறினார்.
வாடகை வீட்டை பார்ப்பதற்கு முன்பே வைப்புத் தொகையை செலுத்து மாறு மோசடிக்காரர்கள் கூறுகின்றனர். பணம் கொடுத்ததும் மோசடிக் காரர்கள் மாயமாகிவிடுகின்றனர்.
மற்றொரு விதமான மோசடியில் வாடகை ஒப்பந்தத்தைக் காட்டி வீட்டை வேறு ஒருவருக்கு கொடுக்காமல் இருக்க முன்பணம் செலுத்து மாறு போலி முகவர்கள் கூறுகின்றனர்.
இதை நம்பி சிலர் பணத்தை அவர்களுக்கு மாற்றிவிடுகின்றனர். "போலி முகவர்களுக்கு பணத்தை அனுப்பிய பிறகு அதனை மீட்பது சிரமமான காரியம் என்பதால் ஆரம்பத்திலேயே எச்சரிக்கையாக இருப்பது நல்லது," என்று 'ஹட்டன்ஸ்' தெரிவித்தது.

