2025ல் நிலவை நோக்கி பயணம் செய்யும் சிங்கப்பூரின் இரு கலைப் படைப்புகள்

2 mins read
50ef2518-c449-4336-bb45-d55214d5d99b
இரு கலைப் படைப்புகளுடன் (இடமிருந்து) சிங்கப்பூர் கலைஞர், கட்டட வடி வமைப்பாளர் லக்ஷ்மி மோஹன்பாபு, 'Namic' அமைப்பின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் பாவ்லோ பர்டோலோ, என்டியுவின் இணைப் பேராசிரியர் டேனியல் நியூ சே ஹவ், உதவி பேராசிரியர் மேட்டியோ செய்ட்டா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரி­லேயே வடி­வ­மைக்­கப்­பட்ட இரு கலைப் படைப்­பு­கள், விண்­வெ­ளி­யில் உள்ள அனைத்­துலக விண்­வெளி நிலை­யத்தை ெசன்று அடைந்துள்ளன.

அனைத்­து­லக கலைப் படைப்­பா­ளர்­க­ளின் 64 நில­வுக்­கான காட்சிப் பொருள்களின் ஒரு பகு­தி­யாக அவை விண்வெளிக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

சரக்­குக் கலன் மூலம் நேற்று விண்­வெளி நிலை­யத்தை சிங்­கப்­பூர் கலைப் படைப்­பு­கள் அடைந்­தன என்­றும் வெவ்­வேறு வடி­வி­லான கலைப் படைப்­பு­கள் புவி­யீர்ப்பு சக்தி இல்­லாத இடத்­தில் எவ்­வாறு செயல்­ப­டு­கின்­றன என்­பதை படைப் பாளர்­கள் கற்­றுக் கொள்­வ­தற்­காக பத்து மாதங்­கள் அங்கு இருக்­கும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

நில­வுக்­கான காட்­சி­ய­கத் திட்­டத்தின் மூலம் முத­லில் 100 வேலைப்பாடு­கள் 2025ல் நில­வுக்கு அனுப்பி வைக்­கப்­படும். ஒவ்­வொரு வேலைப்பாடும் கனசதுர சென்டி மீட்­டர் அள­வைக் கொண்­டது.

சிங்­கப்­பூ­ரின் இரு கலைப் படைப்­பு­களும் முப்­ப­ரி­மாண அச்சு இயந்­தி­ரத்­தின் மூலம் உரு­வாக்­கப் பட்­டவை.

தனிச்­சி­றந்த வடி­வ­மைப்­பில் உள்ள இரண்டின் ஒவ்­வொரு பக்­கத்­தின் நீளம் 0.98 சென்டி மீட்­டர்.

சிங்­கப்­பூ­ர­ரான கட்­டட வடி வமைப்­பா­ள­ரும் கலை­ஞ­ரு­மான லக்ஷ்மி மோஹன்­பாபு இரண்­டை­யும் மனி­த­கு­லத்­தின் ஒற்­றுமை, பன்­ முகத்தன்மை, சிக்­கல் ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு வடி வமைத்­தி­ருந்­தார்.

கியூப் ஆஃப் இண்­ட­ராக்­‌ஷன் எனும் முதல் கன­ச­துர கலைப் படைப்பு, நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக் கழ­கத்­தில் உள்ள சிங்­கப்­பூர் முப்­ப­ரி­மாண அச்சு நிலை­யத்­தில் இணைப் பேரா­சி­ரி­யர் டேனி நியூ உத­வி­யு­டன் உரு­வாக்­கப்­பட்­டது.

இரண்­டா­வது கலைப்­ப­டைப்பு, மாறும் படி­கங்­க­ளைக் கொண்டு தயா­ரிக்­கப்­பட்ட நான்கு தனிப்­பட்ட முகங்­க­ளைக் கொண்­டுள்­ளது.

என்­டி­யு­வின் இயந்­தி­ர­வி­யல், விண்ெவளி பொறி­யி­யல் பள்ளி, உலோக அறி­வி­யல், பொறி­யி­யல் பள்ளி ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த தனது குழு­வு­டன் உதவி பேரா­சி­ரி­யர் மேட்­டியோ செய்ட்டா இதற்­கான தொழில்­நுட்­பத்தை உரு­வாக்கியிருந்­தார்.

இந்­தத் திட்­டத்­திற்கு 'நேமிக்' எனும் (National Additive Manufacturing Innovation Cluster) தேசிய அள­வி­லான திட்­டம் நிதி ஆதரவு அளித்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.