தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோத குதிரைப் பந்தய சூதாட்டம்; விசாரணை

1 mins read
50545ece-4d47-4aa3-a60b-4883b08807ca
-

சட்­ட­வி­ரோத குதி­ரைப் பந்­தய சூதாட்­டத்­தில் ஈடு­பட்­ட­தாக நம்­பப் படும் ஐவ­ரி­டம் காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

கடந்த சனிக்­கி­ழமை அன்று வாம்ேபா டிரை­வில் மேற்­கொள்­ளப்­பட்ட அம­லாக்க நட­வ­டிக்­கை­யில் $3,000க்கும் மேற்­பட்ட ரொக்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

மூவர் பந்­த­யப் பிடிப்­பில் ஈடு­பட்­ட­தாக ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­யில் தெரிய வரு­கிறது.

இரண்டு பேர் சூதாட்­டத்­தில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. ஐவ­ரி­டம் தொடர்ந்து விசா­ரணை நடை­பெற்று வரு­வ­தாக நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் காவல்­துறை தெரி­வித்­தது.

பந்­த­யக்­கா­ரர்­க­ளி­டத்­தில் பந்­த­யம் கட்­டு­ப­வர்­க­ளுக்கு $5000 வரை அப­ரா­தம் அல்­லது ஆறு மாதங்­கள் வரை சிறைத் தண்­டனை அல்­லது இரண்­டுமே விதிக்­கப்­ப­ட­லாம் என்று காவல்­துறை எச்­ச­ரித்­தது.

பந்­த­யக்­கா­ரர்­க­ளுக்கு $20,000 முதல் $200,000 வரை அப­ரா­த­மும் ஐந்து ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­ட­னை­யும் விதிக்­கப்­ப­ட­லாம்.

தொடர்ந்து இது­போன்ற சட்­ட­வி­ரோ­த­மான நட­வ­டிக்­கை­கள் தடுக்­கப்­படும் என்­றும் சட்­ட­வி­ரோ­த­மாக சூதாட்­டத்­தில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளின் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் காவல்­துறை தெரி­வித்­தது.