முட்டை விலை அண்மைய மாதங்களில் அதிகரித்துள்ளன. அதற்கு கோழித் தீனி, விநியோகம் போன்றவற்றில் விலையேற்றம், உலகளாவிய பணவீக்கம் ஆகியவை காரணம்.
உள்ளூர் முட்டைப் பண்ணையான செங் சூன் பண்ணையில் சென்ற மாதம் கோழிகளுக்கு நோய் பரவல் ஏற்பட்டது. இதனால் கோழிகள் முட்டையிடுவது கிட்டத்தட்ட 50 விழுக்காடு குறைந்தது.
இது தற்காலிக தடங்கல் என்றும், மலேசியா, தாய்லந்து போன்ற நாடுகளிலிருந்து முட்டை இறக்குமதி செய்யப்படுவதாக என்டியுசி ஃபேர் பிரைஸ் நிறுவனம் தெரிவித்தது.
முட்டை விநியோகத்தில் அவ்வபோது மாற்றங்கள் ஏற்பட்டாலும், இங்கு முட்டைத் தட்டுப்பாடு ஏற்படுவதற்குச் சாத்தியம் இல்லை என்று விற்பனையாளர்கள் தெரிவித்தனர். அதற்குக் காரணம் சிங்கப்பூருக்குப் பல நாடுகளிலிருந்து முட்டைகள் தருவிக்கப்படுகின்றன.
ஆனால் முட்டைகள் வாங்க வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிக விலை கொடுக்கவேண்டும்.
30 முட்டைகள் உள்ள ஒரு தட்டு $7.20க்கு விற்கப்படுகிறது. சென்ற மாதம் அது $6.15. சென்ற ஆண்டு இந்த விலை $5.
முட்டை விலை தொடர்ந்து அதிகரித்தால், முட்டை சாப்படுவதைக் குறைத்துகொள்வதைத் தவிர வேறு வழி என்று சில வாடிக்கையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.


