தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனநலப் பிரச்சினைகள் உள்ள இளையர்கள் எளிதில் உதவி பெற வகைசெய்யும் திட்டம்

2 mins read
178e5d40-3fa0-4ce1-8c0d-1bde153d558d
நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் ஹலிமா யாக்கோப் (வலது) புதிய திட்டத்தைத் தொடங்கிவைத்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மன­ந­லப் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கும் இளை­யர்­க­ளால் இனி தங்­க­ளின் வீடு­க­ளுக்கு அருகே உதவி பெற வகை­செய்யும் சமூ­கத் திட்­டம் ஒன்று தொடங்­கப்­பட்­டுள்­ளது.

இத்­திட்­டத்­தில் நான்கு சமூக சேவை அமைப்­பு­கள் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. மன­ந­லப் பிரச்­சி­னை­கள் உள்ள 13லிருந்து 19 வய­துக்கு உட்­பட்ட இளை­யர்­க­ளுக்கு உத­வு­வது இலக்கு.

மோச­மான மன­ந­லப் பிரச்­சி­னை­கள் இல்லாத இளை­யர்­க­ளுக்கு இந்த ஏற்­பாடு பொருந்­தும். மன­வு­ளைச்­சல் தொடர்­பி­லான குறைபாடுகள், மனச்­சோர்வு, தவ­றான பழக்­கங்­க­ளுக்கு அடி­மை­யாவது, தங்­க­ளைக் காயப்­ப­டுத்­திக்­கொள்­வது போன்ற பிரச்­சி­னை­களுக்­கு இத்திட்­டத்­தின் மூலம் உதவி வழங்­கப்­படும்.

இரண்டு பிரி­வி­ன­ருக்­கு இந்தத் திட்­டம் பொருந்­தும். சமூக அள­வில் கூடு­தல் உதவி தேவைப்­படக்­கூ­டிய மன­ந­லக் கழ­கத்­தில் அனு­மதிக்­கப்­ப­டா­மல் அங்கே சிகிச்சை பெற்­ற­வர்­கள், சிகிச்சை முடிந்த பிறகு மன­நல உள்­நோ­யா­ளிப் பிரி­வி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­ட­வர்­கள் அல்­லது நிபு­ணத்­துவ மருத்­து­வர்­களி­டம் தொடர்ந்து சிகிச்சை பெறும் நோயா­ளி­கள் ஆகியோர் பல­ன­டை­வர்.

அதி­பர் ஹலிமா யாக்­கோப் நேற்று தொடங்­கி­வைத்த இத்­திட்டத்தை 'கிளப் ஹீல்' அமைப்பு, மன­நல உள்­ளாய்வு நிலை­யத்­திற்­கான சிங்­கப்­பூர் சங்­கம், சிங்­கப்­பூர் சிறு­வர் சங்­கம், 'டச் கம்­யூ­னிட்டி சர்­வி­சஸ்' நன்­கொடை அமைப்பு ஆகி­யவை நடத்­தும். மனந­லக் கழ­கத்­து­டன் இணைந்து அதி­பர் சவால் இதற்கு நிதி­ வழங்­கும்.

இந்­தத் திட்­டம் கட்­டங்­கட்­ட­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும். முதற்­கட்­ட­மாக சம்­பந்­தப்­பட்ட சமூக சேவை அமைப்­பு­கள், மன­நல ஆலோ­ச­கர்­கள், சமூக சேவை ஊழியர்­கள் போன்ற சுகா­தார நிபு­ணர்­களை நிய­மிக்­கும்.

அடுத்த மாதம் முதல் இவ்வாண்டு டிசம்பர் மாதம் வரை இவர்களுக்கு மனநலக் கழகத்தில் பயிற்சியளிக்கப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கழகம் நோயாளிகளை சம்பந்தப்பட்ட சமூக சேவை அமைப்புகளுக்கு அனுப்பும்.

மன­ந­லக் கழ­கத்­தில் சிகிச்­சைப் பெறு­வ­தால் பிறர் தங்­க­ளைத் தவ­றான கண்­ணோட்­டத்­து­டன் பார்க்கக்கூடும் என்ற அச்­சம் பல­ருக்கு இருப்­ப­தாக அதி­பர் ஹலி­மான தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.

"பரா­ம­ரிப்பு வழங்­கக்­கூ­டிய சமுதா­யத்தை வளர்க்­கக் கூடு­தல் முயற்­சி­களை எடுக்­க­லாம், அடிப்­படை பரி­சோ­த­னை­களை வழங்­க­வும் தகுந்த நேரத்­தில் சரி­யான சிகிச்சை அளிக்­க­வும் சமூக சேவை அமைப்­பு­களை மேம்­ப­டுத்­துவதன் மூலம் அதைச் செய்யலாம்," என்று மன­ந­லப் பிரச்­சி­னை­கள் உள்­ள­வர்­க­ளின் படைப்­பு­க­ளைக் கொண்ட மெய்­நி­கர் காட்­சி­ய­கம் ஒன்­றின் திறப்பு விழா­வில் கலந்­து­கொண்ட திரு­வாட்டி ஹலிமா சொன்­னார்.