கொவிட்-19 நிதியுதவித் திட்டங்களால் 480,000 பேர் பலனடைந்தனர்

கொவிட்-19 நிதியுதவித் திட்டங்களால் 480,000 பேர் பலனடைந்தனர்

1 mins read
107249ed-3583-4256-aa6d-9ce1734b6a16
-

கொவிட்-19 கொள்­ளைே­நாய்ப் பர­வல் சூழ­லால் வேலை அல்­லது சம்­ப­ளத்தை இழந்­த­வர்­க­ளுக்கு உதவ மூன்று நிதி­யு­த­வித் திட்­டங்­கள் இருந்­தன. அவற்­றால் கிட்­டத்­தட்ட 500,000 பேர் பல­ன­டைந்­த­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சென்ற ஆண்­டி­றுதி நில­வ­ரப்­படி தற்­கா­லிக நிவா­ரண நிதி, கொவிட்-19 ஆத­ரவு மானி­யம், கொவிட்-19 மீட்சி மானி­யம் ஆகி­ய­வற்­றால் சுமார் 480,000 பேர் பல­ன­டைந்­துள்­ள­தாக சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர் சுன் ஷுவெலிங் கூறி­னார்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக் கழ­கத்­தின் சமூக சேவை ஆய்வு நிலை­யம் இணை­யம்­வழி நடத்­திய கலந்­து­ரை­யா­ட­லில் திரு­வாட்டி சுன் பேசி­னார். உலக சமூக வேலை தின­மான நேற்று 'போஸ்ட்-பெண்­டெ­மிக் சேலஞ்­சஸ் அண்ட் பிளா­னிங் ஃபோர் சோஷி­யல் சர்­வி­சஸ்' எனும் அந்­தக் கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது.

பிரச்­சி­னை­க­ளுக்கு ஆளா­கக்­கூ­டிய அபா­யம் உள்­ள­வர்­கள் கொவிட்-19 சூழ­லால் அதி­கம் பாதிக்­கப்­பட்­ட­தைத் திரு­வாட்டி சுன் குறிப்­பிட்­டார். இத்­த­கை­யோ­ருக்கு உதவ ஏற்­கெ­னவே 'காம்­கேர்' நிதியுதவித் திட்டங்கள் நடப்பில் இருந்தன. அவற்­று­டன் கொவிட்-19 நிதி­யு­த­வித் திட்­டங்­களும் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு மேலும் பல­ன­ளித்­த­தாக அவர் சொன்­னார்.