வல்லுநர்கள்: கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம்

வல்லுநர்கள்: கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம்

1 mins read
759aa58f-9d1a-457d-99f1-36f14b35453f
-

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழ­லால் மருத்­து­வ­ம­னை­கள் இன்­னமும் நெருக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்­றன. இருந்­தா­லும் கட்டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தினால் மோச­மான பாதிப்பு ஏதும் இருக்­காது என்று வல்­லு­நர்­கள் கூறு­கின்­ற­னர்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிருமித்­தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை சுமார் மூன்று வாரங்­க­ளுக்கு முன் உச்­சத்­தைத் தொட்­டது. இரு­ந்­தா­லும், பொது மருத்­து­வ­ம­னை­கள் கவ­னிக்­கும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­மாக இருக்­கும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கொள்­ளை­நோய்ப் பர­வல் வல்­லு­ந­ரான பேரா­சி­ரி­யர் டியோ யிக் யிங் கூறி­னார். எனி­னும், இந்த ஆண்டு பெரும்­பா­லான கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­படும் என்­பது அவ­ரின் கருத்து.

கொவிட்-19 சூழலைக் கையாள நீக்குப்போக்கு அவசியம் என்று மற்றொரு வல்லுநரான தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் தலைமை இயக்குநர் பேராசிரியர் லியோ யீ சின் கூறினார்.

கட்­டுப்­பா­டு­க­ளைக் கட்­டங்­கட்­ட­மா­கத் தளர்த்­த­லாம் என்று தேசிய பல்­க­லைக் கழக மருத்­து­வ­ம­னை­யைச் சேர்ந்த மூத்த கொள்­ளை­நோய்ப் பர­வல் ஆலோ­ச­கர் பேரா­சி­ரி­யர் டேல் ஃபிஷர் கூறி­னார்.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்­திய கொவிட்-19 தொடர்­பி­லான கலந்துரை­யா­ட­லில் இவர்கள் பேசி­னர்.