19வது மாதமாக அதிகரித்துள்ள மறுவிற்பனை கூட்டுரிமை வீடுகளின் விலை

19வது மாதமாக அதிகரித்துள்ள மறுவிற்பனை கூட்டுரிமை வீடுகளின் விலை

1 mins read
5a6cfd8a-a053-47a2-8fd2-5af17594dacb
தாம்சன் வட்டாரத்தில் அமைந்துள்ள'ஸ்கை@இலெவன்' கூட்டுரிமை வீட்டுக் கட்டடம். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மறு­விற்­பனை கூட்­டு­ரிமை வீடு­க­ளின் விலை, தொடர்ந்து 19வது மாத­மாக சென்ற மாதம் அதி­க­ரித்­துள்­ளது. கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­த­தா­லும் உல­க­ள­வில் நிலை­யற்ற சூழல் இருந்­து­வ­ரு­வதா­லும் மறு­விற்­பளை கூட்­டு­ரிமை வீட்­டுப் பரி­வர்த்­த­னை­கள் குறையவும் செய்தன.

சென்ற மாதம் மறுவிற்பனை கூட்டுரிமை வீட்டு விலை 0.6 விழுக்காடு கூடியது. கடந்த ஜனவரி மாதம் இந்த விகிதம் 0.4 விழுக்காடாகப் பதிவானது.

99.co தள­மும் 'எஸ்ஆர்எக்ஸ்' சொத்­துச் சந்தை இணை­யத்­தளமும் இந்­தப் புள்ளி விவ­ரங்­களை வெளி­யிட்­டன. ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் சென்ற மாதம் மறு­விற்­பனை கூட்­டு­ரிமை வீடு­க­ளின் விலை 8.6 விழுக்­காடு அதிகரித்தது.

விற்­ப­னை­யான மறு­விற்­பனை கூட்­டு­ரிமை வீடு­க­ளின் எண்­ணிக்கை. கடந்த ஜன­வரி மாதம் பதி­வா­ன­தைக் காட்­டி­லும் சென்ற மாதம் 9.5 விழுக்­காடு குறைந்­தது. தொடர்ந்து ஆறாவது மாத­மாக விற்­பனை­யான மறு­விற்­பனை கூட்­டு­ரிமை வீடு­க­ளி­ன் எண்­ணிக்கை குறைந்­தது.

சென்ற மாதம் 1,013 மறு­விற்­பனை கூட்­டு­ரிமை வீடு­கள் விற்­பனை­யா­யின. கடந்த ஜன­வரி மாதம் இந்த எண்­ணிக்கை 1,119ஆகப் பதி­வா­னது. ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் சென்ற மாதம் பதி­வான மறு­விற்­பனை கூட்டு­ரிமை வீட்­டுப் பரி­வர்த்­த­னை­கள் 23.9 விழுக்­காடு சரிந்­தன.