'நெருக்கடி காலகட்டத்தில் சீன வர்த்தக, தொழில் சபை துணை நின்றது'

'நெருக்கடி காலகட்டத்தில் சீன வர்த்தக, தொழில் சபை துணை நின்றது'

1 mins read
f1bffb44-599f-4d09-b19a-f297c4aefd29
-

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வல் போன்ற நெருக்­கடி நேரங்­களில் சிங்­கப்­பூர் சீன வர்த்­தக, தொழில் சபை அர­சாங்­கத்­துக்­குக் கைகொ­டுக்­கும் பங்­கா­ளி­யாய் செயல்­பட்­டு­வ­ரு­வ­தா­கத் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியெட் பாராட்­டி­யுள்­ளார்.

சிங்­கப்­பூர் கிரு­மிப்­ப­ர­வ­லில் இருந்து மீண்­டு­வ­ரும் நிலை­யில், உல­க­ளா­விய நிலை­யற்­ற­தன்­மை­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

அத­னால் சபை தொடர்ந்து இரண்டு வகை­களில் முக்­கி­யப் பங்­காற்­ற­லாம் என்­றார் அவர்.

முத­லா­வது உரு­மாற்­றத்­துக்­கான துடிப்­பு­மிக்க உந்­து­சக்­தி­யாக விளங்­கு­தல்; இரண்­டா­வது, சிங்­கப்­பூ­ரின் வாழ்க்கை முறைக்கு உணர்­வு­பூர்­வ­மான ஆத­ரவை வழங்­கு­தல் என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.

பொரு­ளி­யல் கொள்­கை­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான அவர், சிங்­கப்­பூர் சீன வர்த்­தக, தொழில் சபையின் 61ஆவது மன்­றப் பொறுப்­பேற்பு விழா­வில் கலந்துகொண்டு உரை­யாற்­றி­னார்.

நிகழ்ச்சி நேற்று வர்த்­த­கச் சங்க நடுவ அரங்­கில் நடை­பெற்­றது.

ஒரு­முறை மட்­டும் பயன்­ப­டுத்­தக் கூடிய முகக்­க­வ­சங்­கள், தனி­நபர் பாது­காப்­புச் சாத­னங்­கள் ஆகி­ய­வற்­றுக்­கான தட்­டுப்­பாடு ஏற்­பட்­ட­போது சபை அதன் உலகளா­விய தொடர்­பைப் பயன்­ப­டுத்தி அவற்­றைப் பெற்­றுத்­தந்­த­தைத் துணைப்­ பி­ர­த­மர் நினை­வு­கூர்ந்­தார்.

மேலும் சபை அர­சாங்­கத்­துக்­குத் தெரிவித்த கருத்­து­கள் நெருக்கடி நேரத்­தில் வர்த்­த­கங்­க­ளுக்கு உத­வும் அர­சாங்­கக் கொள்­கை­களை வடி­வ­மைப்­ப­தில் உத­வி­யாக இருந்­தன என்­றார் துணைப் பிரதமர்.

அத்­த­கைய பங்­க­ளிப்­பைச் சபை தொடர்ந்து ஆற்­ற­வேண்­டும் என்­றும் திரு ஹெங் வலி­யு­றுத்­தி­னார்.