கடற்கரைப் பாதுகாப்புத் தடுப்புகள் குறித்த ஆய்வு

கடல் நீர்மட்டம் சார்ந்த மோச­மான பேரி­டர்­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரின் கடற்­க­ரைப் பகு­தி­க­ளைப் பாது­காக்க வருங்­கா­லத்­தில் தடுப்பு­கள் போடப்­ப­ட­லாம். நெதர்­லாந்து போன்ற நாடு­களில் வெள்­ளம் ஏற்­ப­டு­வ­தைத் தவிர்க்க இத்­த­கைய தடுப்­பு­கள் கைகொ­டுத்­தி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் தென்­மேற்­குக் கடற்­க­ரைப் பகு­தி­க­ளைப் பாது­காக்க இத்­த­கைய தடுப்­பு­க­ளைப் போடு­வது குறித்து பொதுப் பயனீட்­டுக் கழ­கம் ஓர் ஆய்வை நடத்தி வரு­கிறது.

கடல் நீர் மட்­டம் அதி­க­ரித்­தால் சிங்­கப்­பூ­ரின் கடற்­க­ரைப் பகு­தி­யைப் பாது­காப்­பது இதன் இலக்கு. சிங்­கப்­பூ­ருக்கு அருகே உள்ள பகுதி­களில் புயல் காற்று வீசி­னால் இந்­நிலை உரு­வா­க­லாம்.

பரு­வ­நிலை மாற்­றத்­தால் கடல் நீர்மட்­டம் உய­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அத­னால் கடல் சம்­பந்­தப்­பட்ட மோச­மான இயற்­கைப் பேரி­டர்­கள் நேர­லாம். மேலும், தாழ்­வான பகு­தி­களில் வெள்­ளம் ஏற்­படும் அபா­ய­மும் உள்­ளது.

கடலின் ஆழம், காற்றின் வேகம் உள்ளிட்ட அம்சங்களைப் பொறுத்து சிங்கப்பூரில் கடல் நீர் மட்டம் உயரக்கூடும்.

சிங்­கப்­பூ­ரின் தென்­மேற்­குக் கடற்­க­ரை­யில் பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. தள­வா­டம், எரி­சக்தி, ரசா­ய­னம் உள்­ளிட்­டவை தொடர்­பி­லான நட­வ­டிக்­கை­கள் தென்­மேற்குக் கடற்­க­ரைப் பகு­தி­யில் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­தின் கடற்­க­ரைப் பாது­காப்­புப் பிரி­வின் இயக்­கு­நர் திரு­வாட்டி ஹேசல் கூ கூறி­னார். ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸின் கேள்­வி­களுக்கு அவர் பதி­ல­ளித்­தார்.

"கடல் நீர் மட்­டம் அள­வுக்கு அதி­க­மாக உயர்ந்­தால் கடற்­க­ரைத் தடுப்­பு­கள் நல்ல தீர்­வாக அமை­ய­லாம், கப்­பல் போக்­கு­வ­ரத்­தும் கடற்­துறை நட­வ­டிக்­கை­களும் அதி­கம் பாதிப்­ப­டை­வதைத் தடுக்க அவை எவ்­வாறு உத­வும் என்­பது ஆராயப்­படும்," என்று பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­தின் கடற்­க­ரைப் பாது­காப்­புப் பிரிவு கூறியது.

தென்­மேற்­குக் கடற்­க­ரைப் பகு­திக்­கும் ஜூரோங் தீவுக்­கும் இடையே குறு­கிய நீர்ப்­பகுதி அமைந்­துள்­ளது. அது, தடுப்பு­களை எழுப்­பு­வ­தற்கு வகை­செய்­வதா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

தடுப்­பு­க­ளைப் போடு­வது குறித்த ஆய்வு மூன்று பகு­தி­களை ஆரா­யும். ஜூரோங் தீவின் வடக்­குக் கடற்­க­ரைப் பகுதி, பாசிர் பாஞ்­சாங் முனை­யம், துவா­ஸின் ஒரு பகுதி ஆகி­யவை ஆரா­யப்­படும். இந்த ஆய்வு ஈராண்டுகளுக்கு நீடிக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!