'ஏத்தோஸ்' நிறுவனத்தின் நவீன பாதுகாவல் செயல்பாட்டு நிலையம்

'ஏத்தோஸ்' நிறுவனத்தின் நவீன பாதுகாவல் செயல்பாட்டு நிலையம்

2 mins read
f5ff183b-3ffd-4d2f-b48c-4dea6cd0164c
5ஜி கட்டமைப்பைப் பயன்படுத்தக்கூடிய நவீன தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட 'ஏத்தோஸ்' நிறுவனத்தின் புதிய பாதுகாவல் செயல்பாட்டு நிலையம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

'ஏத்­தோஸ்' பாது­கா­வல் நிறுவனம், புதிய ஒருங்­கி­ணைந்த பாது­கா­வல் செயல்­பாட்டு நிலை­யத்தை அமைத்­துள்­ளது. இந்­நி­று­வ­னத்­தின் சேவை­களை நாடு­வோரால், புதிய நிலை­யத்­தின் மூலம் ஒரு கட்­ட­டத்­தின் அனைத்து அம்­சங்­க­ளை­யும் கண்­கா­ணிக்­க­ மு­டி­யும்.

சந்­தே­கம் தரும் செயல்களைக் கேம­ராக்­க­ளைக் கொண்டு கண்­கா­ணிப்­பது, பாது­காப்பு அம்­சங்­க­ளைக் கவ­னிப்­பது, தண்­ணீர், மின்­சா­ரப் பயன்­பாடு தொடர்­பி­லான அம்­சங்­க­ளைக் கவ­னிப்­பது ஆகிய மூன்­றை­யும் புதிய நிலை­யத்­தில் மேற்­கொள்­ள­லாம்.

பாது­காப்பு உள்பட இதர 'ஃபசி­லிட்­டீஸ் மேனேஜ்­மென்ட்' எனப்­படும் கட்­டட செயல்­பாட்டு நட­வ­டிக்­கை­களை உள்­ள­டக்­கும் சிங்­கப்­பூ­ரின் முதல் ஒருங்­கி­ணைந்த நிலை­யங்­களில் இந்நிலையம் அடங்­கும் எனக் கரு­தப்­ப­டு­கிறது.

தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ, 'ஏத்­தோஸ் ஹோல்­டிங்ஸ்' நிர்­வாக இயக்­கு­நர் ஆல்­ஃபி­ரெட் ஃபாக்ஸ் ஆகி­யோர் இந்­நி­லை­யத்தை நேற்று திறந்­து­வைத்­தனர். புதிய ஒருங்­கி­ணைந்த செயல்­பாட்டு நிலை­யம் கார்ப்­ப­ரே­ஷன் டிரை­வில் அமைந்­துள்­ளது.

கட்­டட செயல்­பா­டு­க­ளின் தொடர்­பில் 'ஏத்­தோஸ்'ஸின் முயற்சி­களை அமைச்­சர் லீ தமது உரை­யில் பாராட்­டி­னார். அதி­க­மான நிறு­வ­னங்­கள் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி மேலும் ஆக்­க­பூர்­வமாகச் செயல்­படும் என்று தாம் நம்­பிக்கை கொண்­டுள்­ள­தா­கத் திரு லீ கூறி­னார்.

"பல்­வேறு கட்­டட செயல்­பாட்டு நட­வ­டிக்­கை­களை ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட ஒரு தளத்­தில் மேற்­கொள்­வ­தன் மூலம் நிறு­வ­னங்­கள் கூடு­தல் ஆக்­க­பூர்­வ­மா­க­வும் பல­னளிக்­கும் வகை­யி­லும் இயங்­க­முடியும்," என்று திரு லீ குறிப்­பிட்டார்.

கட்­டட செயல்­பா­டு­கள் தொடர்­பி­லான 30 மில்­லி­யன் வெள்ளி மதிப்­புள்ள புதிய மானி­யம் சென்ற வாரம் நாடா­ளு­மன்­றத்­தில் அறி­விக்­கப்­பட்­டது. தொழில்­நுட்ப அம்­சங்­களைப் பயன்­ப­டுத்­து­வது உள்­ளிட்­ட­வற்­றுக்கு அதைக் கட்­டட உரி­மை­யா­ளர்­களும் சொத்து மேம்­பாட்­டாளர்­களும் உப­யோ­கித்­துக்­கொள்­ள­லாம் என்­ப­தைத் திரு லீ சுட்டினார். இவ்­வாண்டு பிற்­பா­தி­யி­லி­ருந்து மானியம் வழங்­கப்­படும்.