அமைதிப் பேச்சின் எதிரொலி: எரிபொருள் விலை குறைவு

அமைதிப் பேச்சின் எதிரொலி: எரிபொருள் விலை குறைவு

1 mins read
1948d604-a5b9-4b41-ab67-076e269cb97c
-

ரஷ்யா-உக்­ரேன் அமை­திப் பேச்­சைத் தொடர்ந்து, சிங்­கப்­பூ­ரில் அண்மை மாதங்­களில் தொடர்ந்து அதி­க­ரித்­து­வந்த எரி­பொ­ருள் விலை சற்றே குறைந்­தி­ருக்­கிறது.

இருப்­பி­னும் அனைத்து ரக பெட்­ரோ­லின் விலை­யும் $3.00க்கும் அதி­க­மா­கவே உள்­ளது. கால்­டெக்ஸ், எஸ்ஸோ நிலை­யங்­களில் ஒரு லிட்­டர் 92-ஆக்­டேன் ரக பெட்­ரோ­லின் விலை $3.05.

சென்ற வாரத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் அது 11 காசு குறைவு. இருப்­பி­னும் எஸ்­பிசி நிலை­யங்­களில் நான்கு காசு கூடி $3.04 ஆன­தாக சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கத்­தின் எரி­பொ­ருள் கண்­கா­ணிப்பு அமைப்­பான ஃபூயல் காகி கூறி­யது. ஷெல், சைனோ­பெக் ஆகி­யவை 92-ஆக்­டேன் ரக பெட்­ரோலை விற்­பனை செய்­வ­தில்லை.

பொது­வாக அனைத்து நிலை­யங்­க­ளி­லும் ஒரு லிட்­டர் 95-ஆக்­டேன் ரக பெட்­ரோ­லின் விலை சென்ற வாரத்­தை­விட 14 காசு குறைந்து $3.09ஆக உள்­ளது.

எஸ்­பிசி நிலை­யங்­களில் மட்­டும் ஐந்து காசு உயர்ந்து $3.08ஆக உள்­ளது. ஒரு லிட்­டர் 98-ஆக்­டேன் ரக பெட்­ரோல் ஷெல் நிலை­யங்­களில் $3.58க்கும் மற்­ற­வற்­றில் $3.56க்கும் விற்­பனை ஆகிறது.

இந்­நி­லை­யில், பிர­பல டாக்சி நிறு­வ­ன­மான கம்­ஃபோர்ட் டெல்­குரோ அதன் டீசல் விலையை லிட்­ட­ருக்­குப் பத்து காசு குறைத்து $1.58க்கு விற்­பனை செய்­கிறது.

கச்சா எண்­ணெய் விலைச் சரி­வைத் தொடர்ந்து பெட்­ரோல் மற்றும் டீசல் விலை­களும் குறைந்­தன. பிரெண்ட் கச்சா எண்­ணெய் 14 ஆண்­டில் இல்­லாத அளவு சென்ற வாரம் ஒரு பீப்­பாய்க்கு 139 யுஎஸ் டால­ராக இருந்­தது. நேற்று அது 101 யுஎஸ் டால­ருக்கு விற்­பனை ஆயிற்று.