வர்த்தக ஒப்பந்தம்: ஆசியான் பேச்சுவார்த்தை

வர்த்தக ஒப்பந்தம்: ஆசியான் பேச்சுவார்த்தை

1 mins read
010ae736-a93e-47e7-bbd1-e16b1de4ecad
-

ஆசி­யான் நாடு­கள் அவற்­றுக்கு இடை­யி­லான பொருள் வர்த்­தக ஒப்­பந்­தத்தை மேம்­ப­டுத்­து­வ­தன் தொடர்­பில் நேற்று பேரப்­பேச்­சைத் தொடங்­கி­யுள்­ளன.

தென் கிழக்­கா­சிய நாடு­க­ளுக்கு இடை­யில் பொரு­ளி­யல் ஒருங்­கி­ணைப்பை ஆழப்­ப­டுத்­து­வ­தும் வர்த்­த­கத்தை அதி­க­ரிப்­ப­தும் அவற்­றின் இலக்­கு­கள்.

கம்­போ­டி­யா­வில் நடை­பெற்ற ஆசி­யான் நாடு­க­ளின் பொரு­ளி­யல் அமைச்­சர்­கள் சந்­திப்­பில் பேரப்­பேச்­சு­கள் தொடக்­கம்­கண்­டன.

28ஆவது முறை­யாக இடம்­பெ­றும் சந்­திப்­பில் சிங்­கப்­பூர் வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் கலந்­து­கொண்­டார்.

கம்­போ­டியா இந்த ஆண்டு ஆசி­யான் தலை­மைத்­து­வத்தை ஏற்­றுள்­ளது. அதன் பொரு­ளி­யல் முன்­னு­ரி­மை­க­ளுக்கு சிங்­கப்­பூர் ஆத­ரவு தரும் என்று அமைச்­சர் கான் தெரி­வித்­தார்.

பொருளியல் மீட்சிக்கு உதவும்வகையில் ஆசியான் நாடுகள் இணைந்து பணியாற்றக்கூடிய மூன்று முக்கிய அம்சங்களை அவர் எடுத்துரைத்தார்.

''முதலாவது, தொடரும் ஒற்றுமை மற்றும் வட்டாரப் பொருளியல் ஒருங்கிணைப்பின் முக்கியத்துவம். இரண்டாவதாக, சவால்களை எதிர்கொள்ள ஆசியான் நாடுகள் விரைந்து கூட்டாகச் செயல்படுதல். மூன்றாவதாக, மின்னிலக்கம், பசுமைப் பொருளியல் போன்ற துறைகளில் ஆசியான் தன்னைத் துடிப்புடன் செயல்படும் தொடர்ச்சியாக முன்னேற்றம் காணும் அமைப்பாக நிலைநிறுத்திக் கொள்ளுதல்," என்றார் அமைச்சர் கான்.