20 மாதமாக அதிகரித்த வீட்டு வாடகை

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­கள் மற்­றும் தனி­யார் அடுக்­கு­வீ­டு­கள் ஆகி­ய­வற்­றின் வாடகை விலை­கள் கடந்த மாத­மும் ஏற்­றம் கண்­டன. இருப்­பி­னும் வாட­கைப் பரி­வர்த்­தனை எண்­ணிக்­கை­யில் சற்று இறக்­கம் காணப்­பட்­டது.

வீவக வீடு­க­ளின் வாடகை பிப்­ர­வ­ரி­யில் 1.7 விழுக்­காடு அதி­க­ரித்­தது. அதே­போல கொண்­டோ­மி­னிய வீடு­க­ளின் வாடகை 1.4 விழுக்­காடு ஏறி­ய­தாக '99.co', எஸ்­ஆர்­எக்ஸ் ஆகிய சொத்­துச் சந்தை இணை­யத்­த­ளங்­கள் நேற்று தெரி­வித்­தன. பிப்­ர­வரி நில­வ­ரத்­தை­யும் சேர்த்து, வீவக வீடு­க­ளின் வாடகை தொடர்ந்து 20வது மாத­மா­க­வும் கொண்­டோ­மி­னிய வாடகை தொடர்ந்து 14வது மாத­மும் உயர்ந்­துள்­ளன.

ஆண்­டுக்­காண்டு ஒப்­பி­டு­கை­யில் கொண்­டோ­மி­னிய வாடகை இந்த பிப்­ர­வ­ரி­யில் 11.8 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ளது. மத்­திய வட்­டா­ரம், நகரை ஒட்­டிய பகு­தி­கள், புற­

ந­கர் பகு­தி­களில் இந்த வாடகை ஏற்­றம் காணப்­பட்­டது.

மொத்­தம் 4,248 கொண்­டோ­மி­னிய வீடு­கள் வாட­கைக்கு விடப்­பட்­ட­தாக மதிப்­பி­டப்­பட்­டது.

இது ஜன­வரி மாதத்­தின் 4,473 வீடு­களைக் காட்­டி­லும் 5 விழுக்­காடு குறைவு. மொத்த வாடகை விகி­தத்­தில் புற­ந­கர்ப் பகு­தி­யில் அமைந்த வீடு­களே 37.3 விழுக்­காட்டை வகித்­தன.

கட்டுமானத் தாமதம் காரணமாக புதிய வீடுகளுக்குப் பற்றாக்குறை இருப்பதும் வாடகை ஏற்றம் கண்டு வருவதற்குக் காரணம் என்று சொத்துச் சந்தை நிபுணர்கள் கூறு கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!