சவரக்கத்தி வெட்டு; ஆண், பெண் காயம்: ஆடவர் மீது குற்றச்சாட்டு

சவரக்கத்தி வெட்டு; ஆண், பெண் காயம்: ஆடவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
af6d1eb8-4954-4a52-a5f2-1cbf6f085535
-

சவ­ரக்­கத்­தி­யால் (பிளேடு) இரு­

வ­ரைக் காயப்­ப­டுத்­தி­ய­தாக 33 வயது ஆட­வர் மீது நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

முகம்­மது எஸ். முஹி­புல்லா சையத் அப்­துல்லா எனப்­படும் அந்த சிங்­கப்­பூ­ரர் கடு­மை­யான ஆயு­தத்­தால் வேண்­டு­மென்றே காயம் ஏற்­

ப­டுத்­தி­ய­தாக இரு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

திங்­கட்­கி­ழமை நிகழ்ந்த சம்­ப­வத்­தில் ஜான் ரயான் புகிஸ்­தான் ஜிமெ­னஸ், 38, என்­ப­வ­ரின் கழுத்­தில் ஆட­வர் கத்­தி­யால் வெட்­டி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

பாலின் கோ குவேக் சூ, 49, என்­னும் மாதின் இடது கையில் அதே ஆயு­தத்­தால் அவர் தாக்­கி­ய­தா­க­வும் தெரியவந்­தது.

குற்­றம் சாட்­டப்­பட்­டுள்ள முஹி­புல்லா, மன­ந­லக் கழ­கத்­தில் இரு­வா­ர காலத்திற்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வார். அங்கு அவரது மனநலம் கண்காணிக்கப்படும்.

மீண்­டும் மார்ச் 30ஆம் தேதி அவர் நீதி­மன்­றத்­திற்கு வர­வேண்­டும்.

குவீன்ஸ்­ட­வுன் வட்­டா­ரத்­தில் உள்ள புளோக் 59 ஸ்ட்­ராத்­மோர் அவென்­யூ­வில் நடை­பெற்ற சம்­ப­வம் குறித்து திங்­கட்­கி­ழமை மாலை 6 மணி­ய­ள­வில் தங்­க­ளுக்கு ஏரா­ள­மான அழைப்­பு­கள் வந்­த­தாக காவல்­துறை தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

காய­ம­டைந்த ஆட­வர் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார். இலே­சான காயம் என்­ப­தால் மாது, மருத்­து­வ­மனை செல்­ல­வில்லை.