வாள் தாக்குதல்: குற்றம் சுமத்தப்பட்ட ஆடவர் மனநலப் பரிசோதனைக்கு அனுமதி

வாள் தாக்குதல்: குற்றம் சுமத்தப்பட்ட ஆடவர் மனநலப் பரிசோதனைக்கு அனுமதி

2 mins read
6d836648-5114-42ef-83b3-819eaa4bda14
ஆடவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாள். படம்: சிங்கப்பூர் காவல்துறை -

புவாங்ேகாக் ஸ்கு­வேர் கடைத்­

தொ­குதி அருகே பாத­சா­ரி­க­ளி­ட­மும் கார்­க­ளி­ட­மும் வாளை வீசி­ய­படி இருந்த ஆட­வர் ஒரு­வர் மீது புதன்­கி­ழமை (மார்ச் 16) நீதி­மன்­றத்­தில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. சமு­ராய் வாளைக் கொண்டு வேண்­டு­மென்றே காயம் விளை­வித்­த­தாக அவர் மீது ஒரு குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது.

ஃபடில் யூசோப் எனும் அந்த 37 வயது ஆட­வர் காணொளி இணைப்பு மூலம் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டார்.

திரு அமிலா சிந்­தானா என்

­ப­வரை மூன்று முறை வாளால் தாக்­கி­ய­தாக சிங்­கப்­பூ­ர­ரான ஃபடில் மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. திங்­கட்­கி­ழமை (மார்ச் 14) பட்டப் பகலில் நிகழ்ந்த இச்­சம்­ப­வத்­தில் திரு சிந்­தா­னா­வின் இடது கை, தோள்­பட்­டை­யில் வெட்­டுக்காயங்­கள் ஏற்­பட்­டன.

ஃபடில், வாளை எடுத்­துக்­கொண்டு வீட்­டி­லி­ருந்து புறப்­ப­டு­வ­தற்கு முன்பு, என்­ன­வென்றே தெரி­யாத சில மாத்­தி­ரை­களை உட்­கொண்­ட­தா­கத் தெரி­கிறது என காவல்­துறை முன்­ன­தாக வெளி­யிட்ட அறிக்­கை­யில் கூறி­யி­ருந்­தது.

அந்த ஆட­வர் வசித்த வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக புளோக்­கின் மின்­தூக்­கித் தளத்­தில் பொது­மக்­கள் சில­ரு­டன் தக­ராற்­றில் ஈடு­பட்­டி­ருந்­தார்.

"பின்­னர், கண்­மூ­டித்­த­ன­மாக சாலை­யைக் கடந்த அவர், வாளைக் கொண்டு அவ்­வ­ழி­யா­கச் சென்ற ஐந்து கார்­க­ளைத் தாக்­கி­ய­தா­கத் தெரிய வந்­தது," என்­றும் காவல்­துறை குறிப்­பிட்­டது.

புவாங்ேகாக் ஸ்கு­வேர் கடைத்­தொ­கு­திக்கு முன்­னால் உள்ள போக்­கு­வ­ரத்­துச் சந்­திப்­பில் நின்­று­கொண்­டி­ருந்த திரு சிந்­தானா மீது ஃபடில் வாளை வீசி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. திரு சிந்­தா­னாவை எதிர்­கொண்­ட­போது ஃபடில் தரை­யில் வழுக்­கி­ய­தைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திய திரு சிந்­தானா, அவ­ரைக் கீழே அழுத்­திப் பிடித்து கட்­டுப்­ப­டுத்­தி­னார்.

இத­னைக் கண்­ட­தும் அங்­கி­ருந்த பொது­மக்­கள் சிலர் ஓடி வந்து, காவல்­து­றை­யி­னர் வரும்­வரை ஃபடி­லைக் கட்­டுப்­ப­டுத்த உத­வி­னர். இச்சம்­ப­வத்­தில் வேறோர் ஆட­வ­ருக்கு முட்­டிப் பகு­தி­யில் சிராய்ப்­புக் காயங்­கள் ஏற்­பட்­டன.

ஃபடி­லு­டைய செயல், பயங்­க­ர­வா­தத்­து­டன் தொடர்­பு­டை­யது அல்ல என்­பது இது­வரை நடத்­தப்­பட்­டுள்ள விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது. அவ­ரது வீட்­டில் நடத்­தப்­பட்ட சோத­னை­யில், இரு பாக்­கெட்­டு­கள் மஞ்­சள் மாத்­தி­ரை­களை அதி­கா­ரி­கள் கண்­ட­றிந்­த­னர்.

மன­ந­லப் பரி­சோ­த­னைக்­காக அவர் சாங்கி சிறைச்­சாலை காம்­பி­ளெக்ஸ் மருத்­துவ மையத்­தில் மூன்று வாரங்­க­ளுக்கு விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கப்­ப­டு­வார். இந்த வழக்கு ஏப்­ரல் 6ஆம் தேதி மீண்­டும் விசா­ர­ணைக்கு வரும்.