சிங்கப்பூரில் புதன்கிழமை (மார்ச் 16) நிலவரப்படி 11,278 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. ஒப்புநோக்க செவ்வாய்க்கிழமை 17,051 பேருக்குத் தொற்று உறுதியானது.
நேற்றைய நிலவரப்படி 1,238 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அதற்கு முந்தைய நாள் இந்த எண்ணிக்கை 1,311.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 171 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 36 பேர் உள்ளனர்.
தொற்றுப் பாதிப்பால் மேலும் 11 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 137 பேருக்குத் தொற்று உறுதியானது.
மார்ச் 16 நிலவரப்படி, சிங்கப்பூரில் மொத்தம் 975,607 தொற்றுச் சம்பவங்களும், 1,170 தொற்றுப் பாதிப்பால் மரணங்களும் பதிவாகியுள்ளன.
வாராந்திர கொவிட்-19 தொற்று அதிகரிப்பு விகிதம் தொடர்ந்து 15 நாளாக 1க்குக் கீழ் உள்ளது. நேற்று அது 0.76ஆக இருந்தது.


