மார்ச் மாதம் இறுதி வரை மழை

மார்ச் மாதம் இறுதி வரை மழை

1 mins read
5d49294e-fb76-44cf-a432-22c4cfb12f97
மழை பெய்தாலும், சில நாள்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசை எட்டக்கூடும் (படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்) -

மார்ச் மாதம் இறுதிவரை மழை பெய்யும் என வானிலை நிலையம் முன்னுரைத்துள்ளது.

பெரும்பாலும் காலையில் இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றையும் எதிர்பார்க்கலாம்.

இம்மாதம் பல பகுதிகளில் மழைநீர் அளவு சராசரி அளவைவிட அதிகமாக இருக்கும்.

மழை தொடர்ந்து பெய்தாலும், சில நாள்களில் வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியசை எட்டக்கூடும். பெரும்பாலான நாள்களின் வெப்பநிலை 24லிருந்து 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனக் கூறப்பட்டது.