ஒரு வயது குழந்தையைக் காயப்படுத்திய ஆசிரியருக்கு 10 மாதம் சிறை

ஒரு வயது குழந்தையைக் காயப்படுத்திய ஆசிரியருக்கு 10 மாதம் சிறை

1 mins read
ccf7c6f7-5fce-4c15-b615-697460c63056
படம்: பெக்ஸல்ஸ் -

ஒரு வயது குழந்தையை அடித்து காயப்படுத்திய பாலர் பள்ளி ஆசிரியருக்கு 10 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

சிறுவனின் முதுகில் பலத்த காயங்கள் ஏற்படும்வரை அவர் அவனை அடித்ததாகக் கூறப்பட்டது. 30 நிமிடங்களாக அவர் அவனைத் தொடர்ந்து அடித்ததாகவும், குழந்தை வலியில் அழுதபோதிலும், அவர் அடிப்பதை நிறுத்தவில்லை என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாக்க அந்த 55 வயது பெண்ணின் பெயர் வெளியிடப்பட முடியாது.

ஒரு பாலர் பள்ளியில் குழந்தைகளுக்குச் சாப்பாடு ஊட்டுவது, ஆடை மாற்றுவது, அவர்களுடன் விளையாடுவது போன்ற பணிகளை அந்த நபர் பார்த்துவந்தார்.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி சம்பவம் நடந்தது.

குழந்தையின் முதுகை 22 முறை அடித்தது, கண்ணத்தை அறைந்தது, அவன் முகத்தை ஒரு தலையணை மீது ஓங்கி அடித்தது, அவனைத் தரையில் தள்ளியது போன்ற வன்முறையான செயல்களை அவர் புரிந்தார்.

தமது செயலை மூடிமறைக்க, குழந்தைக்கு அதிக உணர்திறன் உள்ள தோல் இருக்கக்கூடும் என்றும், அதனால் அவனை இலேசாகத் தட்டியதால் காயங்கள் ஏற்பட்டதாக அவர் அந்தச் சிறுவனின் தாயாரிடம் பொய் சொன்னார்.

அடுத்த நாள் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது, அவனுக்கு ஏற்பட்ட காயங்கள் பலத்த அடியால் ஏற்பட்ட ன என்று கூறப்பட்டது.

பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பபு கருவிகளில் உள்ள காணொளியைப் பார்ததபோதுதான் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.