'எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்வால் ஹோட்டல் சந்தை மீண்டுவரும்'

'எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்வால் ஹோட்டல் சந்தை மீண்டுவரும்'

1 mins read
2d4ac338-d6aa-48e9-b858-682dd85826d4
கிராண்ட் கொப்தார்ன் ஹோட்டலும் அதன் சுற்று வட்டாரமும். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

'விடி­எல்' எனும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணப் பாதை­கள் அதி­க­மா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. அதை­யொட்டி இவ்­வாண்டு சிங்­கப்­பூ­ருக்கு வருகை தரும் பய­ணி­க­ளின் எண்ணிக்­கை­யும் தொடர்ந்து அதி­க­ரிக்­கும் எனக் கணிக்­கப்­பட்­டுள்­ளது. இது, ஹோட்­டல்­க­ளுக்­குச் சாத­க­மாக அமை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சென்ற ஆண்டு பிற்­பா­தி­யில் ஹோட்­டல் சந்தை ஓர­ளவு மீண்டு வரு­வ­தற்­கான அறி­கு­றி­கள் தென்­பட்­ட­தாக 'சிபி­ஆர்இ' சொத்து நிறு­வ­னம் ஆக அண்­மை­யில் வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. பொது­வாக சொகுசு சேவை­கள் சம்­பந்­தப்­பட்ட அம்­சங்­க­ளால் சிங்­கப்­பூ­ரின் ஹோட்­டல் சந்தை பல­ன­டைந்­த­தாக அந்த அறிக்கை குறிப்­பிட்­டது. சிங்­கப்­பூ­ரின் ஹோட்­டல் சந்தை நில­வ­ரத்தை விவரிக்க அறிக்கை வரை­யப்­பட்­டது.

கிரு­மித்­தொற்று சூழ­லால் பயணத்­துறை பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. நீண்ட காலம் பய­ணம் மேற்­கொள்ள முடி­யா­மல் போன­தால் மக்களிடையே அதற்­கான தேவை திடீ­ரென கணி­ச­மாக அதி­க­ரிக்­கக்­கூ­டும்.

ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் சென்ற ஆண்டு பிற்­பா­தி­யில் சிங்­கப்­பூ­ருக்கு வந்த பய­ணி­க­ளின் எண்­ணிக்கை 172.4 விழுக்­காடு கூடி­யது. பய­ணங்­கள் மேற்­கொள்­வதற்­கான தேவை திடீரென அதி­க­ரிக்கக்கூடும் என்பதற்கு இது சான்று. அதனால் சிங்கப்பூரின் ேஹாட்டல் சந்தை மேம்படும் என்று 'சிபிஆர்இ' ஓரளவு நம்பிக்கை கொண்டுள்ளது.

கொள்­ளை­நோய்ப் பர­வ­லால் பல பொருள்­கள், சேவை­க­ளின் விலை அதி­க­ரித்­துள்­ளது. புதிய கொவிட்-19 கிரு­மி­கள் உரு­வெ­டுக்­கக்­கூ­டும் என்ற அச்­சம் நிலவி வரு­கிறது. சீனா­விற்­குச் சென்று வரு­வ­தற்­கான பய­ணத் திட்­டங்­களில் தாம­தம் ஏற்­பட்­டுள்­ளது. இருந்­தா­லும், தொடர்ந்து மீண்­டு­வர சிங்­கப்­பூர் வலு­வான அடித்­த­ளத்தை அமைத்­தி­ருப்­ப­தாக 'சிபி­ஆர்இ' நம்­பு­கிறது.