செய்திக்கொத்து

'கூடுதல் நோன்புப் பெருநாள்

நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்'

நோன்புப் பெருநாளை முன்னிட்டு முன்பு மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் இவ்வாண்டு மீண்டும் இடம்பெறலாம். இது, சிங்கப்பூரின் கொவிட்-19 நிலவரத்தையும் தேசிய சுகாதார வழிமுறைகளையும் பொருத்தே அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலான பங்கேற்பாளர்களுடன் நடைபெறும் கூட்டு வழிபாடுகள் போன்றவை இத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும்.

நடவடிக்கைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் உறுதிசெய்யும். எனினும், கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்தைய காலத்தில் இருந்ததைப்போல் நிலைமை இருக்காது என்று இஸ்லாமிய சமய குருவான முஃப்டி நசிருதீன் மகம்மது நசீர் இம்மாதம் ஏழாம் தேதியன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.

அடுத்த மாதம் இரண்டாம் தேதியன்று ரமலான் மாதம் தொடங்குகிறது.

சிங்கப்பூர் பிரிமியர் லீக்: கூடுதல்

பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்

இன்று முதல் சிங்கப்பூர் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டங்களைக் கூடுதலானோர் நேரில் சென்று பார்க்கலாம்.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து சிங்கப்பூர் பிரிமியர் லீக் ஆட்டங்களைக் காண அதிகபட்சமாக 1,000 பேர் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். பார்வையாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கவேண்டும்.

இயல்பு நிலையில் இருக்கும்போது ஒரு விளையாட்டரங்கின் அனைத்து இருக்கைகளிலும் பார்வையாளர்கள் இருக்கலாம். இன்று முதல் ஓர் அரங்கின் மொத்த இருக்கைகளில் பாதியளவு பார்வையாளர்கள் இருக்கலாம்.

ஆட்டங்களை நேரில் சென்று காண விரும்பும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கவேண்டும்.

முன்பதிவின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்

கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தகுதி உள்ள அனைவரும் இனி முன்பதிவின்றி தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். 'பூஸ்டர்' எனும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கும் இது பொருந்தும்.

நேற்று முதல் இந்த ஏற்பாடு நடப்புக்கு வந்தது. இதன்படி தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதி உள்ள அனைவரும் எல்லா நாள்களிலும் தடுப்பூசி நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். தினமும் மாலை ஏழு மணிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்.

பொங்கோலில் உள்ள யூசோஃப் இஷாக் உயர்நிலைப் பள்ளியில் உள்ள தடுப்பூசி நிலையம் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அந்தப் பள்ளியில் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். சென்ற வாரம் வியாழக்கிழமையிலிருந்து இந்த ஏற்பாடு நடப்பில் உள்ளது.

சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு. பாலர் கல்வி மேம்பாட்டு அமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டன. வரும் வாரங்களில் மேலும் சில தடுப்பூசி நிலையங்கள் மூடப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

11,278 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

சிங்கப்பூரில் நேற்று முன்தினம் 11,278 புதிய கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாயின. வாராந்திர கிருமித்தொற்று விகிதம் 0.76க்குக் குறைந்தது.

தொடர்ந்து 15வது நாளாக வாராந்திர கிருமித்தொற்று விகிதம் ஒன்றுக்குக் கீழ் பதிவானது.

9,680 பேருக்கு 'ஏஆர்டி' பரிசோதனையின் மூலம் கிருமித்தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. இவர்கள் நோய்க்கான அறிகுறிகள் இல்லாதவர்கள் அல்லது மோசமாக நோய்வாய்ப்படாதவர்கள்.

கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் 1,238 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் மரணமடைந்தனர். 36 பேர் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 171 பேருக்கு செயற்கை சுவாச உதவி தேவைப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!