பதவி விலகும் சுகாதார மேம்பாட்டு வாரிய தலைமை நிர்வாக அதிகாரி

பதவி விலகும் சுகாதார மேம்பாட்டு வாரிய தலைமை நிர்வாக அதிகாரி

1 mins read
3d81f1f5-3cf2-43da-815d-3ee558404d62
-

சுகா­தார மேம்­பாட்டு வாரி­யத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி ஸீ யூங் காங் அடுத்த மாதம் முதல் தேதி­யன்று பதவி வில­க­வுள்­ளார். இவர் மூன்று தவ­ணைக் காலம் இந்­தப் பொறுப்பை வகித்­துள்­ளார்.

தற்­போது வாரி­யத்­தின் தலைமைச் செயல்­பாட்டு அதி­கா­ரி­யாக விளங்­கும் கோ பெங் கெங் தற்­கா­லி­க­மாக தலைமை நிர்­வாக அதி­காரி பொறுப்பை வகிப்­பார். அடுத்த தலைமை நிர்­வாக அதி­கா­ரி­­யைத் தேர்ந்­தெ­டுக்­கும் வரை கோ பெங் கெங் இந்­தப் பத­வியை வகிப்­பார் என்று சுகா­தார மேம்­பாட்டு வாரி­ய­மும் சுகா­தார அமைச்­சும் இணைந்து வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

திரு ஸீ, ஒன்­பது ஆண்­டு­க­ளாக தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யாக இருந்து வந்­துள்­ளார். இந்­தக் கால­கட்­டத்­தில் பொட்­ட­ல­மி­டப்­பட்ட உண­வுப் பொருள்­களில் சுகா­தா­ரக் குறிப்­பு­களை முத்­தி­ரை­யி­டு­வது பர­வ­லா­கப் பின்­பற்­றப்­பட்­டது. மேலும், நோய்­கள் வரா­மல் தடுக்க உத­வும் 'ஸ்கி­ரீன் ஃபோர் லைஃப்' எனும் வாழ்­நா­ளுக்­கான பரி­சோதனை திட்­ட­மும் அதி­க­மா­கப் பின்­பற்­றப்­பட்­டது.