எண்ணெய் சாரா பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி மெதுவடைந்தது

எண்ணெய் சாரா பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி மெதுவடைந்தது

1 mins read
e1dfce51-7f60-4198-86f3-7b5daec0fcaf
-

சிங்­கப்­பூ­ரின் முக்­கிய ஏற்­று­ம­தி­கள் சென்ற மாதம் தொடர்ந்து விரிவடைந்­த­போ­தும், ஏற்­று­மதி வளர்ச்சி மெது­வ­டைந்­தது. ரஷ்­யா­வுக்­கும் உக்­ரே­னுக்­கும் இடை­யி­லான போர், தடை­பட்ட விநி­யோ­கச் சங்­கிலி போன்­றவை இதற்­கான கார­ணங்­கள் என்று கரு­தப்­ப­டு­கின்­றன.

பிப்­ர­வரி மாதத்­துக்­கான எண்­ணெய் சாரா உள்­நாட்டு உற்­பத்­திப் பொருள்­க­ளின் ஏற்­று­மதி, ஆண்டு அடிப்­ப­டை­யில் 9.5 விழுக்­காடு வளர்ச்சி கண்­ட­தாக என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் நேற்று தக­வல் வெளி­யிட்­டது.

முன்­ன­தாக, புளூம்­பெர்க் நடத்­திய கருத்­தாய்­வில் சென்ற மாதத்­துக்­கான சிங்­கப்­பூ­ரின் ஏற்­று­மதி வளர்ச்சி 16.5 விழுக்­கா­டாக இருக்­கும் என்று வல்­லு­நர்­கள் முன்­னு­ரைத்­தி­ருந்­த­னர். ஒப்­பு­நோக்க ஜன­வ­ரி­யில் ஏற்­று­மதி வளர்ச்சி 17.6 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது.

மின்­ன­ணுப் பொருள்­க­ளின் ஏற்­று­மதி வளர்ச்சி சென்ற மாதம் 11.6%. ஜன­வ­ரி­யில் அது 14% ஆக இருந்­தது. பிப்­ர­வ­ரி­யில் மின்­ன­ணுப் பொருள் அல்­லா­த­வற்­றின் ஏற்­று­மதி வளர்ச்சி 8.8%. ஜன­வ­ரி­யில் அது 18.6% வளர்ச்சி கண்­டி­ருந்­தது.

சென்ற மாதம் 17.6 பில்­லி­யன் வெள்ளி மதிப்­பு­மிக்க எண்­ணெய்­சா­ராப் பொருள்­கள் ஏற்­று­மதி செய்­யப்­பட்­டன. ஜன­வ­ரி­யில் ஏற்­று­மதி ஆன பொருள்­க­ளின் மதிப்பு 18.1 பில்­லி­யன் வெள்ளி.

ஒட்­டு­மொத்­தத்­தில், பட்­டி­ய­லில் முன்­ன­ணி­யில் இருக்­கும் 10 இடங்­க­ளுக்­கான எண்­ணெய் சாராப் பொருள் ஏற்­று­மதி அதி­க­ரித்­த­தாக என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் குறிப்­பிட்­டது. ஐரோப்­பிய ஒன்­றி­யம், சீன, மலே­சியா போன்­ற­வற்­றுக்கு மருத்­து­வப் பொருள்­களும் சிறப்பு இயந்­தி­ரங்­களும் கூடு­த­லாக ஏற்­று­மதி ஆன­தாக அது குறிப்­பிட்­டது.

பிப்­ர­வரி மாதத்­துக்­கான சிங்­கப்­பூ­ரின் மொத்த வர்த்­த­கம், ஆண்டு அடிப்­ப­டை­யில் 21 விழுக்­காடு விரி­வ­டைந்­த­தா­கத் தக­வல்­கள் கூறு­கின்­றன.