ஆள்மாறாட்ட மோசடி வலையில் வீழாமல் தப்பித்த ஆழ்மன சிகிச்சை நிபுணர்

ஆள்மாறாட்ட மோசடி வலையில் வீழாமல் தப்பித்த ஆழ்மன சிகிச்சை நிபுணர்

2 mins read
b24fc0db-3baa-40a1-8c33-9cac0639e08d
-

ஆழ்­மன சிகிச்­சை­யில் பயிற்சி பெற்ற 46 வயது திரு­வாட்டி அமிலியா காங், குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணைய அதி­கா­ரி­யைப் போன்று நடித்து ஏமாற்ற முயன்ற மோச­டிக்­கா­ர­ரின் வலை­யில் வீழா­மல் தப்­பித்­தார்.

நேற்று முன்தினம் தம்மை குடி­நு­ழை­வுத் துறை அதி­காரி என்று அறி­மு­கப்­ப­டுத்­திக்­கொண்டு ஆட­வர் ஒரு­வர் தொலை­பே­சி­யில் அழைத்­தார். திரு­வாட்டி காங் கொவிட்-19 நோய்க்கு சிகிச்சை அளிக்­கும் ரெம்­டெ­சி­வர் மருந்தை, உரி­மம் இன்றி இறக்­கு­மதி செய்­வ­தா­கக் குற்­றம்­சாட்­டி­னார். தொற்­று­நோய் சிகிச்சை நிபு­ணர்­கள் மட்­டுமே அந்த மருந்தை நோயா­ளி­க­ளுக்­குத் தர முடி­யும் எனும் நிலை­யில் திரு­வாட்டி காங் அவ்­வாறு செய்ய அனு­மதி இல்லை என்­றார் அந்த ஆட­வர்.

அவ­ரது சிங்­கப்­பூர் முக­வ­ரிக்கு அனுப்­பப்­பட்ட பொட்­ட­லத்தை ஷங்­காய் சுங்­கத்­துறை தடுத்து வைத்­தி­ருப்­ப­தா­க அவர் கூறினார்.

இது­கு­றித்து சீன அதி­கா­ரி­கள் சிங்­கப்­பூர்க் குடி­நு­ழைவு, சோத­னைச் சாவ­டி­கள் ஆணை­யத்­திற்­குத் தக­வல் அளித்­தி­ருப்­ப­தா­க­வும் அந்த ஆட­வர் கூறி­னார். அதிர்ஷ்­ட­வ­ச­மாக திரு­வாட்டி காங் அந்த மோச­டிக்­கா­ர­ரி­டம் ஏமா­ற­வில்லை.

ஆழ்­மன சிகிச்சை அளிப்­ப­தற்­கு­ரிய பயிற்சி பெற்­றி­ருக்­கும் அவர், மயக்­க­நி­லைக்­குக் கொண்­டு­சென்று தாம் சொல்­வ­தைக் கேட்­கத் தூண்­டும் உத்­தி­களை அந்த ஆட­வர் பின்­பற்­று­வ­தைக் கண்­டு­கொண்­ட­தா­கச் சொன்­னார்.

+65 6391 6100 என்ற தொலை­பேசி எண்­ணில் இருந்து குடி­நுழைவு, சோத­னைச் சாவ­டி­கள் ஆணை­யத்­தின் அதி­கா­ரி­க­ளைப் போன்று நடிக்­கும் சிலர் அழைத்து ஏமாற்ற முய­லும் மோசடி குறித்து அறிந்­தி­ருப்­ப­தாக ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

ஆணை­யத்­தின் மீதான பொது­மக்­க­ளின் நம்­பிக்­கை­யைக் கீழறுக்கும் இத்­த­கைய மோச­டிச் செயல்­க­ளைக் கடு­மை­யா­கக் கரு­து­வ­தா­க­வும் அது தெரி­வித்­தது.

இதுபோன்ற பல்வேறு மோசடிச் சம்பவங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.