தவறாகப் பயன்படுத்தப்படலாம்

தவறாகப் பயன்படுத்தப்படலாம்

2 mins read
d2a652f9-567e-4e64-85b5-0f5a9a8b1c29
வெளிப்புறச் சாதனங்களை விற்கும் நல்னோ.காம் நிறுவன உரிமையாளர் திரு வருண் சிங் தமது கடையில் ஒன்டாரியோ 12 அங்குல கத்தியை ஏந்தியுள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கத்­தி­கள், வாள்­கள், பிற ஆபத்­தான ஆயு­தங்­கள் போன்ற பொருள்­கள் சம்­பந்­தப்­பட்ட குற்­றங்­கள் இந்த வாரம் நடந்த பிறகு அவை பல­ரது கவ­னத்தை ஈர்த்­துள்­ளது.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் சந்­தித்த சில்­லறை விற்­ப­னை­யா­ளர்­கள் சிலர் இது தங்­க­ளுக்கு கவ­லை­ய­ளிக்­கிறது என்று கூறி­னார்­கள்.

ஏனெ­னில் அவர்­கள் யாரும் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­க­ளு­டன் தொடர்பு வைத்­தி­ருக்க விரும்­ப­வில்லை.

அத்­த­கைய பொருள்­களை வாங்கு­ப­வர்­கள் அவற்­றுக்­கான பொறுப்பை ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்று காவல்­துறை வழி­காட்டு­தல்­கள் உள்­ளன என்­றா­லும் ஆயு­தங்­கள் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் அபா­யத்­தைக் குறைப்­ப­தற்கு இந்த வர்த்­த­கர்­கள் தங்களுக்கென சொந்த விதி­க­ளை­யும் அமல்­ப­டுத்தி­யி­ருக்­கி­றார்­கள்.

ஆனால் வாங்­கு­ப­வர்­கள் இந்த பொருள்­க­ளைத் தவ­றாக பயன்­படுத்தமாட்­டார்­கள் என்­ப­தற்கு இவை உத்­த­ர­வா­தம் அளிப்பதில்லை என்று சில்­லறை விற்­பனை­யா­ளர்­கள் மேலும் தெரி­வித்­த­னர்.

சட்­டத்­தின்­படி, சில ஆயு­தங்­களை காவல்­துறை உரி­மம் மற்­றும் ஒழுங்­கு­முறை துறை­யின் ஒப்­பு­தலு­டன் இறக்­கு­மதி செய்­ய­லாம்.

இணைய ஆயுத விற்­ப­னை­யாளர்­க­ளான கேஎன்­எக்ஸ் நிறு­வ­னத்­தின் வர்த்­தக உரி­மை­யா­ள­ர் திரு ரேமண்ட் கோ, காவல்­துறைக்கு அனுப்­பப்­படும் பதி­வேட்­டில் வாள்­கள் போன்ற கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஆயு­தங்­களை வாங்­கு­ப­வர்­க­ளின் விவ­ரங்­களை அவற்றை விற்­கும் நிறு­வ­னங்­கள் பதிவு செய்­கின்­றன என்­றார்.

சுல்­தான் பிளாசா கடைத் தொகு­தி­யில் நல்னோ.காம் எனும் வெளிப்­புற உப­க­ர­ணக் கடையை நடத்தி வரும் திரு வருண் சிங், 38, கத்­தி­கள், நீண்ட வாள்­கள், கோட­ரி­கள் ஆகி­ய­வற்­றைத் தவ­றாக ஆயு­தங்­க­ளா­கப் பயன்­ப­டுத்­தி­னா­லும், விவ­சா­யி­கள், ஒப்­பந்­தக்­கா­ரர்­கள், படை வீரர்­கள் போன்ற நிபு­ணத்­துவ தொழில் புரி­ப­வர்­க­ளுக்கு அவை அத்­தி­யா­வ­சி­ய­மான கரு­வி­க­ளா­கப் பயன்­ப­டு­கின்­றன என்றார்.

"அட்டைப் பெட்­டி­களை வெட்டு­வ­தற்கு அல்­லது தாவ­ரங்­களை வெட்ட இக்கருவிகள் பயன் படுகின்றன. இந்­தப் பொருட்­க­ளைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தும் சில­ரின் செயல்­க­ளுக்கு நான் பொறுப்­பேற்க முடி­யாது," என்று அவர் கூறி­னார்.

பொது இடத்­தில் தாக்­கு­தல் நடத்­தக்கூடிய ஆயு­தம் வைத்­தி­ருப்­ப­வர்­களுக்கு குறைந்­த­பட்­சம் ஆறு பிரம்­ப­டி­க­ளு­டன் மூன்று ஆண்டு­கள் வரை சிறைத்­தண்­டனை விதிக்­கப்­படலாம்.