போதைப் பொருள் குற்றங்களுக்காக
14 ஆடவர்கள் கைது
இம்மாதம் 10 முதல் 16ஆம் தேதி வரை மேற்கொள்ளப் பட்ட போதைப் பொருள் நடவடிக்கை களுக்கு எதிரான திடீர் சோதனையில் 28 வயதுக்கும் 61 வயதுக்கும் இடைப்பட்ட 14 ஆடவர்கள் கைது செய்யப் பட்டனர்.
அவர்களிடமிருந்து 280 கிராம் கொக்கெய்ன், 54 கிராம் கஞ்சா விதைகள், 33 எக்ஸ்டசி மாத்திரைகள், கட்டுப்படுத் தப்பட்ட போதைப் பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 245 கிராம் சாக்லெட் நிறத் தூள் ஆகியவை மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன (படம்).
இம்மாதம் 10ஆம் தேதி அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பில் 61 வயது ஆடவரும் 59 வயது ஆடவரும் 32 வயது ஆடவரும் கைது செய்யப்பட்ட னர். அவர்களிடமிருந்து 277 கிராம் கொக்கெய்ன், 14 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விதைகள், கட்டுப்படுத்தப்பட்ட போதைப் பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 245 கிராம் சாக்லெட் நிறத் தூள், போதைப் புழக்கத்துக்குப் பயன் படுத்தப்படும் பொருள்கள் ஆகியவை அந்த வீட்டுக்குள்ளும் வீட்டைச் சுற்றிலும் கண்டுபிடிக்கப்பட்டன. இசைவட்டுப் பெட்டிகளிலும் புத்தகங்களிலும் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்பிலான விசாரணையில் இம்மாதம் 16ஆம் தேதியன்று போதைப் புழங்கிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 28 வயதுக்கும் 58 வயதுக்கும் இடைப்பட்ட 11 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நால்வர் சிங்கப்பூரர்கள், எழுவர் வெளிநாட்டினர். அவர்களிடமிருந்து 40 கிராம் கஞ்சா, 3 கிராம் கொக்கெய்ன், 33 எக்ஸ்டசி மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
10 சிறார்களிடம் பாலியல் குற்றங்கள்: இளையருக்கு சீர்திருத்தப் பயிற்சி
ஜூலை 2017ல் இளம் சிறுமிக்கு எதிராக பாலியல் குற்றங் களைப் புரிந்தபோது அந்த இளைஞனுக்கு வெறும் 14 வயது தான். அப்போதிருந்து பிப்ரவரி 2020 வரை, இப்போது 18 வயதான அந்த குற்றவாளி, மேலும் ஒன்பது சிறார்களைக் குறிவைத்தார். சிங்கப்பூரைச் சேர்ந்த அந்த இளையருக்குக் குறைந்தது ஓராண்டு சீர்திருத்தப் பயிற்சி, அதாவது இளம் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு தண்டனை நேற்று விதிக்கப்பட்டது.
பிப்ரவரி 24 அன்று, 16 வயதுக்குட்பட்ட சிறார்களிடம் அவர் புரிந்த பாலியல் தொடர்பிலான நான்கு குற்றச்சாட்டு களை ஒப்புக்கொண்டார். மற்ற ஆறு சிறுமிகள் தொடர்பான மேலும் 29 குற்றச்சாட்டுகள் தண்டனையின்போது கருத்தில் கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, குற்றவாளியின் பெயரைக் குறிப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
'எல்லோரையும் கொன்றுவிடுவேன்' என்று மிரட்டிய நபருக்கு சிறை
சிகிச்சை பெற்றுவந்த மனநலக் கழகத்தின் அதிகாரி யிடம் அனைவரையும் தாம் கொன்றுவிடப் போவதாக ஆடவர் ஒருவர் ஜனவரி மாதம் 13ஆம் தேதி கூறினார். அதேபோல அன்று பின்னேரத்தில் அவர் பொதுப் பூங்காவில் ஒரு வெட்டுக் கத்தியுடன் காணப்பட்டார்.
பொதுமக்களுக்குத் தொந்தரவு கொடுத்ததுடன் வெட்டுக் கத்தியுடன் காணப்பட்டதற்காக 22 வயது முஸ்டாக்கிம் ஸக்காரியாவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை 21 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வாரம் நீதிமன்றத்துக்கு வந்த ஆபத்தான ஆயுதங்கள் தொடர்பான பல சம்பவங்களில் இதுவும் ஒன்று.
ஜனவரி 13ஆம் தேதி 26 வயது பெண்ணான அந்த அதிகாரியிடம் முஸ்டாக்கிம், மலாய் மொழியில், "நான் எல்லாரையும் கொல்லப் போகிறேன்," என்று கூறியுள்ளார். அதைக் கேட்டு அச்சமுற்ற அந்தப் பெண் காவல்துறையிடம் அன்று மாலை 5.20 மணிக்கு புகார் கொடுத்தார்.
அதன் தொடர்பில் காவல் துறையினர் தீவு முழுவதும் நடத்திய தீவிர தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு அந்த இரவு 8.45 மணிக்கு உட்லண்ட்ஸ் வாட்டர்ஃபிரண்ட் பூங்காவில் முஸ்டாக்கிம்மைக் கண்டுபிடித்தனர். அவரிடம் ஒரு வெட்டுக்கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொலைபேசியில் அதிகாரியிடம் பேசிய பிறகு, முஸ்டாக்கிம் ஒரு பல்பொருள் அங்காடிக்குச் சென்று அந்த ஆயுதத்தை $8.90க்கு வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆயுதம் வைத்திருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், முஸ்டாக்கிம்முக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

